Home » பொதுவானவை » அமெரிக்க அதிபரின் செல்போன் ரகசியங்கள்?
அமெரிக்க அதிபரின் செல்போன் ரகசியங்கள்?

அமெரிக்க அதிபரின் செல்போன் ரகசியங்கள்?

எனக்கு போனில் அந்த வசதி வேணும், இன்டெர்னல் மெமரி இவ்வளவு இருக்கனும் என்று நாமே அவ்வளவு ஆசைப்படும் போது, உலக அதிபர்களில் மிகவும் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க அதிபர் ஒபாமா என்ன போன் பயன்படுத்துகிறார், அதன் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி தெரிந்துகொள்வது சுவாரசியம்தானே ?   

அமெரிக்க அதிபர் ஒபாமா அதிபர் ஆவதற்கு முன்பிலிருந்தே பிளாக்பெர்ரி போன் பிரியர். 2008 ல் அதிபர் ஆனா பின்பு சிலகாலம் பாதுகாப்பு அம்சங்களுக்காக அவருக்கு செக்யூர் செக்டர எட்ச் என்ற போனை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆணையம் தயாரித்து வழங்கியது.

ஆனால் அதிபரின் பிளாக்பெர்ரி போன் ஆசையினால், திரும்பவும் அவருக்கு ப்ளாக்பெர்ரி போன் வழங்கப்பட்டது. தேசிய பாதுகாப்பு மையத்தால் வடிவமைக்கபட்ட செக்யூர் வாய்ஸ் என்னும் மென்பொருள் மூலம் இந்த போனில் நடத்தப்படும் உரையாடல்கள் பாதுகாக்கபடுகின்றன.

தற்போது அதிபர் பயன்படுத்தும் இந்த போனை அவ்வளவு எளிதில் யாரும் ஹாக் செய்திடமுடியாது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த போனில் கேம்ஸ், செல்பி கேமரா, வாட்ஸ்அப் போன்ற எதுவும் கிடையாது.

அதிபர் எங்கெல்லாம் பயணிக்கிறரோ, அங்கெல்லாம் அவருக்கு பாதுகாப்பான தொலை தொடர்பு மையத்தை அமைத்து கொடுப்பது வெள்ளை மாளிகையின் தொலைதொடர்பு நிறுவனந்தின் வேலை. இதன் மூலம் அதிபர் என்ன செய்கிறார், எங்கே இருக்கிறார் போன்றவற்றை யாரும் அவ்வளவு எளிதில் கண்டறிய முடியாது. ட்ராக்கிங் என்று சொல்லபடுகின்ற பின்தொடர்தலுக்கு இங்கே முற்றிலும் இடமில்லை.

இந்த போனை பயன்படுத்தி முக்கியமான 10 பேரிடம் மட்டும்தான் பேச முடியும். துணை அதிபர் ஜோ பிடேன், ஒபமாவின் ஆலோசகர்கள், ஒபமாவின் உதவியாளர், மனைவி மிச்செல் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சிலருடன்தான் பேசமுடியும்.

barack obama phone

போனில் உள்ள வசதிகளை சித்தரிக்கும் படம்

தற்போது இந்தியா வரவிருக்கும் அதிபர் ஒபாமா இந்த போனைதான் பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.