Home » பொதுவானவை » ஈபே தளத்தில் போலியான பொருட்கள் !
ஈபே தளத்தில் போலியான பொருட்கள் !

ஈபே தளத்தில் போலியான பொருட்கள் !

பிரபல மின்வணிக தளமான ஈபேயில் போலியான கேனன் பிரிண்டர் விற்றதாக மும்பையை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளது மின்வணிகத்தின் மேல் உள்ள நம்பிக்கையை இழக்க செய்வதாக அமைந்துள்ளது. 

சில நாட்களுக்கு முன்பு ஸ்நாப் டீல் தளத்தில் ஸ்மார்ட் போன் ஒன்றை ஆர்டர் செய்தவருக்கு, விம் பார் சோப்கள் அனுப்பிவைக்கபட்டது சர்ச்சைக்குள்ளானது. இதற்காக அந்நிறுவனம் அவரிடம் மன்னிப்பு கேட்டு, அவருக்கு இலவசமாகவே அவர் ஆர்டர் செய்திருந்த ஸ்மார்ட் போனை திரும்ப அனுப்பியது.

பென்டிரைவ் அனுப்புவதற்கு பதிலாக மூன்று முறை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வெற்று பெட்டிகளை அனுப்பியுள்ளது பிலிப்கார்ட்.

இந்த செய்தி சமுக வலை தளங்களில் வீடியோவாக பகிரப்பட்டு மின்வணிக தளங்களின் நம்பிக்கையை இழக்க செய்துள்ளன. பிரபல கணினி தயாரிப்பு நிறுவனங்களான டெல், லெனோவோ, கடந்த வருடம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தங்களது வாடிக்கையாளர்கள் யாரும் அவர்களது தயாரிப்புகளை மின்வணிக தளங்களில் வாங்கி ஏமாற வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளது.

எனவே ஆன்லைன் தளங்களில் பொருட்கள் வாங்கும் முன் ஒரு முறை யோசித்துவிட்டு வாங்குங்கள்.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.