Home » பொதுவானவை » என் கண்மணி உன் காதலி
என் கண்மணி உன் காதலி

என் கண்மணி உன் காதலி

சிட்டு குருவி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ” என் கண்மணி, உன் காதலி” பாடலை நாமெல்லாம் கேட்டிருப்போம். என்னதான் அந்த படலை கேட்டு கேட்டு மெய்சிலிர்த்து போனாலும், அந்த பாடல் பதிவு செய்யப்பட்ட விதம் நமக்கெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஜோகன் செபஸ்டின் பாச்

ஜோகன் செபஸ்டின் பாச்

SPB ஒரு மேடை நிகழ்ச்சியில் கூறும்போது, Double  Track செய்யப்பட்ட பாடல் என்று மட்டும் சொல்லிவிட்டு போனார். அதிலிருந்து, இந்த Double Track பத்தியும், பாடலில் உள்ள மத்த அம்சங்களையும் பற்றி ஆராய்ந்தால் நிறைய தகவல்கள் கிடைச்சது. அதான் ஒரு பதிவாகவே எழுதிட்டேன்.

முதலில் வெஸ்டேர்ன் மியூசிக்கில் கவுன்ட்டர் பாயிண்ட் (Counter Point) என்ற வித்தை ஒன்று இருக்கிறது. இந்த வித்தையை கண்டுபிடிச்சவர் ஜோகன் செபஸ்டின் பாச் (Johann Sebastian Bach) . ஜேர்மனிய இசை அமைப்பாளரான இவர் ஸ்ட்ரிங்டு கருவிகள் இசைப்பதில் வல்லவர்.

அவர் எப்போவோ கண்டுபிடித்த இந்த டெக்நிக்கை இளையராஜா இந்த பாடலில் நம் போல் பாமரர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் பயன்படுத்திருப்பார்.

கவுன்ட்டர் பாயிண்ட் என்றால் என்ன (Counter Point)

இளையராஜா சொன்னது போல எழுத வேண்டுமென்றால் ” ஒரு மெலடி அதன் மேலே இன்னொரு மெலடி, இரண்டும் ஒரே நேரத்தில் பாடும் போது அதை  கவுன்ட்டர் பாயிண்ட் என்று சொல்வார்கள். பாடப்பட்ட இந்த இரண்டு மெலடிகளை பிரித்து பார்க்கும் போது, தனி தனி tune களாக, அர்த்தம் கொண்டதாக வரவேண்டும். கடைசியில் சேர்த்து மொத்த பாடலாக பார்க்கும் போது ஒரே அர்த்தம் தரவேண்டும்.

பாடல் உருவாக்கபட்ட விதம்

இந்த கவுன்ட்டர் பாயிண்ட்டுக்கு ஏற்றார் போல் சிட்டு கருவி படத்தில் காதலனும் காதலியும் பஸ்சில் பயணம் செய்துகொண்டிருப்பார்கள், அவர்கள் மனசாட்சிகள் காதல் பற்றி பேசிக்கொள்ளவேண்டும் என்ற கட்டம் வரும்போது இந்த கவுன்ட்டர் பாயிண்ட்களை  அழகாக வடிவமைத்திருக்கிறார் ராஜா.

இந்த பாடல் பற்றி முதலில் வாலியிடம் இளையராஜா சொன்னபோது, ” என்னையா நீ? இந்த நட்ட நடு ராத்திரியில ‘சிட்டுக்குருவிக்கு சிட்டப் பிச்சுக்கிற மாதிரி ஐடியா கொடுக்குறே? , முதலில் ஒரு உதாரண tune போடு” என்றாராம்.

ஆண் : பொன்
பெண் : மஞ்சம்
ஆண் : தான்
பெண் : அருகில்
ஆண் : நீ
பெண் : வருவாயோ?

இப்போது ஆண் மட்டும் பாடியதை  தனியாக பிரித்து பார்த்தோமானால்,  “பொன் தான் நீ” என்று பொருள் வரும்.

அதேபோல் பெண் பாடியதை தனியாக பிரித்து பார்த்தோமானால் “மஞ்சம் அருகில் வருவாயோ “  என்று பொருள் வரும்.

அதாவது ஆணும் பெண்ணும் தனித்தனியாய் பாடும்போது ஒரு அர்த்தமும், மொத்தமாய் பார்க்கும் போது ஒரு அர்த்தமும் வரும்.

இதை சொன்ன பிறகு வாலி மளமளவென்று அவர் பாணியில் எழுதிதள்ளிவிட்டாராம். வாலி எழுதியது எல்லோருக்கும் பிடித்துபோக, ஒலிபதிவுக்கு தயாரானது.

இப்போது என் கண்மணி பாடலை பாருங்கள்

என் கண்மணி இளமாங்கனி, சிரிக்கின்றதேன்?
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ?

உன் காதலி உனைப்பார்த்ததும் சிரிக்கின்றதேன்?
நீ நகைச்சுவை மன்னன் இல்லையோ?

என் மன்னவன் எனைப் பார்த்ததும் கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ?

உன் காதலன் ஓராயிரம் கதை சொல்கிறான்
நீ ரசிக்கின்றக் கன்னியில்லையோ?

அசத்தலா இருக்கு இல்லையா .

ஒலிபதிவில் புதிய யுக்தி

ஐடியா எல்லாம் கிடைச்சிருச்சி, எப்படி ஒலிப்பதிவு பண்றது என்பது ஒரு பெரிய சவால். கண் இமைக்கும் நேரத்தில் குரல்கள் ஓவர்லாப்பிங் முறையில் ஒலித்து கொண்டே இருக்கும். இதற்க்கு ஒரே தீர்வு,  முதலில் ஒரே ஒரு குரல் பாடுவதை மட்டும் ஒலிபதிவு செய்துவிட்டு, மற்றொரு குரல் பாடுவதை இசையை மட்டும் வைத்து பூர்த்தி செய்துவிடவேண்டும். பிறகு பதிவு செய்த பாடலை ப்ளே (Play) செய்து அடுத்த குரலை இதனுடன் பாடி இணைக்க வேண்டும். இதுதான் Double Track முறை. இந்த பாடலின் இடை இடையே வரும் வசனங்கள் ( இந்தமா கருவாட்டுகூடை முன்னாடி போ … ), ராஜாவின் அண்ணன் பாஸ்கர் அவர்களால் பேசப்பட்டது.

இன்றைக்கு இது ஒரு பெரிய விஷயமில்லை என்றாலும், 1970 களில் இது ஒரு பெரிய விஷயம்தான்.

இந்த பாடலை காதலர்கள் இருவரும்  பஸ்ஸை விட்டு இறங்கி முடிக்கும் போது, மனதில் உள்ள பாரங்கள் எங்கோ இறங்கி கரைவது நிதர்சனமான உண்மை.

திரை பாடலை இந்த பதிவுடன் இணைக்க முடியவில்லை, அதனால் இந்த லிங்கில் செல்லவும்

விருப்பமுள்ளவர்கள் கீழே சின்ன குயில் சித்ராவும் அய்யா SPB யும் இணைந்து பாடிய இந்த காணொளியை  காணலாம் .

தயவு செய்து இந்த  கட்டுரை பற்றி விமர்சனங்களை Comment ல் போடுங்கள் . இது என்னை மென்மேலும் எழுத உற்சாகபடுத்தும் .உங்களுக்கு பிடித்திருந்தால், தயவு செய்து நண்பர்களுடன் பகிருங்கள். நல்ல விசயங்களை எல்லோரும் தெரிந்து கொள்ளட்டும்.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.