Home » கணினி » எல்.சீ.டி திரையுடன் மாஸ்டர் கார்டு
எல்.சீ.டி திரையுடன் மாஸ்டர் கார்டு

எல்.சீ.டி திரையுடன் மாஸ்டர் கார்டு

இந்த காலத்தில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு இல்லாதவர்கள் யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு டெபிட்,கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஒரு வங்கியில் நீங்கள் கணக்கு தொடங்கும் போதே ஏ.டி.எம் கார்டு என்று சொல்லும் டெபிட் கார்டை கையில் கொடுத்துவிடுகிறார்கள். 

தற்போது டெபிட்,கிரெடிட் கார்டுகளின் பாதுகாப்பை கருதி, எல்.சீ.டி திரையுடன் கூடிய  கார்டுகளை மாஸ்டர் கார்டு நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ளது. இந்த சேவை முதற்கட்டமாக சிங்கப்பூரில் உள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் (Standard Chartered) வங்கியில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

இந்த வகை கார்டுகளை பயன்படுத்துவதன் மூலம் இன்டர்நெட் பாங்கிங் சுலபமாக செய்யமுடியும். இன்டர்நெட் பாங்கிங் சேவைக்கு தேவையான ஒரு முறை பயன்பாட்டு கடவுச்சொல்லை இந்த புதிய கார்டின் மூலம் எளிதில் உருவாக்கி விடமுடியும். கடவுச்சொல்லை உருவாக்குவதெற்கென பிரத்தியோக தொடு உணர் பொத்தான்கள் கொடுக்கப்பட்டுள்ளது .

எதிர்காலத்தில் இந்த வகை கார்டு மூலம் உங்கள் வங்கி கணக்கின் இருப்பு தொகையை நீங்கள் தெரிந்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.