தினம் தினம் நாம் கணினி தகவல்கள் திருடப்படுவதை பற்றி கேள்விப்படுகிறோம். உலகில் எங்கோ, யாருக்கோ நடக்கும் போது, அது நமக்கு செய்தியாக மட்டும் தெரிகிறது. ஆனால் அது செய்தியல்ல, உங்களுக்கான எச்சரிக்கை.
இன்று அடுத்தவர் கணினியில் இருந்து தகவல்களை திருடி , தங்கள் திறமையை ஊருக்கு காட்டவேண்டும்மென்றே பல கணினி மேதாவிகள் சுற்றிகொண்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்தும், வைரஸ்களிடமிருந்தும் உங்கள் கணினியை காப்பாற்ற சில குறிப்புகள்.
ஆன்டிவைரஸ்
ஒவ்வொரு கணினிக்கும் ஆண்டிவைரஸ் மிகவும் அவசியமான ஒன்று.கீழ்வரும் செயல்களில் ஏதாவது ஒன்றை உங்கள் கணினியில் அடிக்கடியோ அல்லது எப்போதாவதோ செய்தால் உங்கள் கணினிக்கு ஆண்டிவைரஸ் அவசியம்.
- உங்கள் கணினியை இணையத்தோடு இணைத்தால்,
- முக்கியமான கோப்புகளை சேமித்து வைத்திருந்தால்,
- உங்கள் பர்சனல் (Personal) புகைப்படங்கள், காணொளிகள் போன்றவற்றை சேமித்து வைத்திருந்தால்,
- நெட் பாங்கிங், ஆன்லைன் ஷாப்பிங் போன்றவற்றை பயன்படுத்தினால்,
- பென்டிரைவ் அல்லது எக்ஸ்டெர்னல் ஹர்டிஸ்க் போன்றவற்றை இணைத்தால்,
- ஏதாவது மென்பொருள்களை தரவிறக்கம் செய்தோ அல்லது நேரடியாகவோ இன்ஸ்டால் செய்தால்
உங்கள் கணினியை தாக்க நினைப்பவர்கள், இணையம் வழியே spy சாப்ட்வேர்களை உங்கள் கணினியோடு இணைத்து விட்டால் போதும், பிறகு இது உங்கள் கணினியல்ல,அவர்களது கணினியாகிவிடும் .அதனால் ஆண்டிவைரஸ்களை பயன்படுத்துதல் அவசியம்.
பயர்வாள் ( Firewall )
உங்கள் கணினியை இணையத்தோடு இணைத்து நீங்கள் பயன்படுத்தும் வேளைகளில், உங்கள் கணினி தவறான தளங்களுக்கோ அல்லது வைரஸ் அச்சுறுத்தல் உள்ள தளங்களுக்கோ செல்லாமல் உங்கள் கணினியை காப்பாற்றுவது இந்த பயர்வாள்தான். விண்டோஸ் கணினிகளில் இவைகள் ஏற்கனவே அக்டிவேட் செய்யப்பட்டுதான் இருக்கும். இருந்தாலும் கூடுதல் பாதுகாப்பிற்காக, இந்த இலவச COMODO பயர்வாளை பயன்படுத்தலாம்.
கடினமான பாஸ்வோர்ட்
உங்கள் பாஸ்வோர்ட்களை , எப்போதும் யாரும் கணிக்க முடியாத அளவு அமைக்க வேண்டும். குறிப்பாக பிறந்த நாள், திருமண நாள், பிள்ளைகள் பெயர், தேர்வு பதிவெண் போன்றவற்றை பாஸ்வோர்ட்களாக அமைக்க கூடவே கூடாது. உங்கள் பாஸ்வோர்ட்களில் குறைந்த பட்சம் ஒரு பெரிய எழுத்து, ஒரு சின்ன எழுத்து, ஏதாவது ஒரு சிம்பல், நம்பர் போன்றவை இருந்தால், உங்கள் பாஸ்வோர்ட்களை யாராலும் அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது.
சரியான மென்பொருட்கள்
இணையத்தில் கிடைக்கும் எல்லா மென்பொருட்களையும் தரம் அறியாமல், உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளாதீர். அப்படி செய்வதால் உங்கள் கணினி வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகலாம், குறிப்பாக Cracked version மென்பொருட்களை பயன்படுத்தும்போது இது போன்ற பாதிப்புகளில் உங்கள் கணினி சிக்கிக் கொள்ள வாய்ப்புண்டு. அதனால் எப்போதும் ஒரிஜினல் மென்பொருட்களை பயன்படுத்துங்கள்.தவறாமல் அவ்வபோது மென்பொருட்கள் அப்டேட் செய்யுங்கள்.
பண வர்த்தகம் செய்யும் போது
பண வர்த்தகம் செய்யும் போது https:// யை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
நம்பகம் இல்லாத தளங்களில் பண பரிவர்த்தனை செய்வதோ அல்லது உங்கள் பேங்க் கணக்குகளின் ஆன்லைன் பாங்கிங் பற்றிய விவரங்களை சொல்வதோ கூடாது.
உங்களுக்கு 500 கோடி டாலர்கள் பரிசாக விழுந்திருக்கிறது என்று உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் வந்தால், அதை பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் அழித்துவிடுங்கள்.இவைகள் அனைத்தும் போலியானவை.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால், நண்பர்களுடன் ஷேர் செய்யுங்கள்.
என்னுடைய இலவச பதிவுகள் உங்களுக்காக .. உங்கள் ஈமெயில் முகவரியை இங்கு கொடுங்கள்
Latest posts by Gunaseelan V (see all)
- டிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2 - December 10, 2017
- டிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1 - December 1, 2017
- தமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும் - November 14, 2017
- டிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள் - August 23, 2017