Home » மொபைல் » களைகட்டிய ஐ போன் முதல் நாள் விற்பனை
களைகட்டிய ஐ போன் முதல் நாள் விற்பனை

களைகட்டிய ஐ போன் முதல் நாள் விற்பனை

உலக நாடுகள் பலவற்றிலும் ஐ போன்கள் அறிமுகப்படுத்தும் போதெல்லாம், “நம்ம ஊருக்கு எப்ப விற்பனைக்கு வரும்” என்று எதிர்பார்த்துகொண்டிருந்த இந்திய ஐ போன் பிரியர்களுக்கு அக்டோபர் 17 ம் தேதி, ஒரு சந்தோஷமான நாளே.

இந்தியாவில் ஐ போன் அறிமுகம் செய்யப்பட்ட 12 மணி நேரத்திற்குள் சுமார் 35,000 போன்கள் விற்று தீர்ந்துவிட்டன. டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் போன்ற நகரங்களில் நள்ளிரவு  12 மணியிலிருந்தே விற்பனை தொடங்கப்பட்டுவிட்டன. தாங்கள் முன்பதிவு செய்த போனை வாங்குவதற்கு, எல்லோரும் முதல் நாள் இரவே வந்து கடையின் முன் வந்து நின்றுகொண்டது, இந்தியாவிற்கே புதிதுதான்.

ஐ போன் இந்தியா அறிமுகம்

நள்ளிரவு முதல் ஐ போன் வாங்க காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்

இந்தியாவில் அக்டோபர் 7 ம் தேதியே ஐ போனுக்கான முன்பதிவு ஆரம்பிக்கபட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது 6 மற்றும் 6+ என்ற இரண்டு மாடல்களில் விற்பனையாகும் ஐ போன்களில் ஏற்கனவே அன்ட்ரைடு மாடல்களில் வந்த வசதிகள்தான் உள்ளது என்றாலும், ஐ போனை ஒரு முறையாவது பயன்படுத்திவிட வேண்டும் என்று இளைஞர்கள் ஆர்வம் காட்டிவருகிறார்கள்.

ஐ போன், கோல்ட், சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே போன்ற மூன்று வண்ணங்களில், 16, 64, 128 ஜிபி கொள்ளவுகளில் கிடைக்கிறது.

தற்போதைய விலை நிலவரங்கள்

ஐ போன் 16 ஜிபி – 53,500 முதல்

ஐ போன் 64 ஜிபி – 62,500 முதல்

ஐ போன் 128 ஜிபி – 71,500 முதல்

ஐ போன் வாங்குவதற்கு முன்பு இந்த தளங்களுக்கு சென்று விலைகளை சரியாக தெரிந்துகொண்டு, எங்கு வாங்குவது என்று முடிவு செய்துகொள்ளுங்கள்.

பிலிப் கார்ட்

அமேசான்

ஸ்னப் டீல்

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.