Home » Uncategorized » சிவில் சர்வீஸ்
சிவில் சர்வீஸ்

சிவில் சர்வீஸ்

நான் IAS ஆகவேண்டும்,அல்லது IPS ஆகவேண்டும் என்று ஆசை இருக்கலாம்.அதற்கு நான் என்ன செய்யவேண்டும்,எவ்வளவு காலம் படிக்க வேண்டும், இந்த தேர்வை எழுதுவதற்கான தகுதிகள் என்னென்ன போன்ற சந்தேகங்கள் பலருக்கு இருக்கலாம்.அதை தெளிவு படுத்துவதற்காகதான் இந்த பதிவு .

தேர்வு

இந்தியாவின் மிக உயர்பதவிகளுக்காக கருதப்படும் IAS , IFS, IPS  போன்ற பணிகளுக்காக  ஆண்டுதோறும் Union Public Service Commission இந்த தேர்வை  நடத்துகிறது. முதல் நிலை, மெயின் தேர்வு , இன்டர்வியூ என மூன்று கட்டங்களாக நடத்தப்படும் இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள்  மதிப்பெண்கள்  அடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்யப்படும்.

தகுதி

இந்த தேர்வை நீங்கள் எழுத குறைந்த பட்சம், அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் எதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

எப்படி படிப்பது

தேர்வுக்கு தயார் செய்பவர்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம.

  • வேலை செய்துகொண்டே பகுதிநேரமாக படிப்பவர்கள்.
  • முழு நேரமாக படிப்பவர்கள் .

இதில் முழு நேரமாக படிப்பவர்களை இந்த பதிவில் விட்டுவிடலாம் .ஆனால் வேலைக்கு சென்று கொண்டே இந்த தேர்வுக்கு தயாராவது கொஞ்சம் சிரமமான விஷயம்தான், ஆனாலும் சூழ்நிலை நிமித்தமாக, வேலை செய்து கொண்டு படிக்க வேண்டிய கட்டாயம் வந்தால் கீழே உள்ள சிலவற்றை பின்பற்ற முயற்சி செய்யுங்கள்.

  1. பகுதிநேரமாக ஏதாவது ஒரு நல்ல பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொள்ளுங்கள்.
  2. முழு நேரமாக படிக்கும் மாணவர்களுடன் எப்போதும் தொடர்பில் இருங்கள் .
  3. மாலை நேரங்களை முழுவதும் படிப்பிற்காக ஒதுக்கிவிடுங்கள்.
  4. எந்நேரமும் உங்கள் அலுவலக பணிகளை பற்றியே நினைத்து கொண்டிருக்காதீர்கள்.
  5. அலுவலக பணிகளை எக்காரணம் கொண்டும் வீட்டுக்கு கொண்டு வராதீர்கள்.

எவ்வளவு செலவாகும்

எவ்வளவு செலவு ஆகும் என்பதை சரியாக சொல்லமுடியாது, ஏனென்றால் நீங்கள் உங்கள் சொந்த ஊரிலயே படிப்பதற்கும், சென்னை, டெல்லி போன்ற நகரங்களில் போய் படிப்பதற்கும் வித்தியாசம் உண்டு.

வெளியூர்களில் வாடகைக்கு ரூம் எடுத்து படித்தால் குறைந்த பட்ச வாடகை, உணவு, புத்தகங்கள் வாங்கும் செலவுகள், பயிற்சி நிறுவன கட்டணம் போன்றவற்றை கருத்தில் கொண்டு, நீங்களே ஒரு தோரயமாக கணக்கு போட்டுகொள்ளலாம்.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.