Home » டிஜிட்டல் மார்க்கெட்டிங் » டிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2
டிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2

டிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2

கடந்த வாரம் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பகுதி 1 ல் இன்டர்நெட் குறித்த சில அறிமுகங்களை பற்றி எழுதியிருந்தேன். இந்த வாரம் டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்றால் என்ன? எதிர்காலத்தில்  அது எது போன்ற வளர்ச்சியை பெறப்போகிறது என்பதை பற்றி விரிவாக பார்போம்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்றால் என்ன?

டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது எந்த ஒரு பொருளையோ அல்லது தகவலையோ மக்களிடம் இன்டர்நெட் வழியாக கொண்டுச் சேர்த்தல் டிஜிட்டல் மார்கெட்டிங் என சொல்லலாம்.

இன்னும் உங்களுக்கு புரியும்படியாக சொல்ல வேண்டுமென்றால், யாரோ ஒருவர் ஒரு கடையை உங்கள் ஊரில் துவங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் தினசரி அந்த கடை திறப்பு விழா மற்றும் அது குறித்த தகவல்களை பேஸ்புக், வெப்சைட், ஈமெயில்,  வாட்ஸ்அப் போன்ற பிளாட்பார்ம் மூலமாக அனைவருக்கும் தெரியப்படுத்துகின்றார் என்றால் அதுதான் டிஜிட்டல் மார்க்கெட்டிங்.

டேய் தம்பி. இதைதான் நாங்க எப்போதும் எங்க போன்லயே பன்றோமேனு சொல்றீங்களா.

ஆமாங்க இது டிஜிட்டல் மார்கெட்டிங்கின் அடிப்படை. யாரெல்லாம் ஒரு போனை வைத்துக்கொண்டு நண்பர்களுக்கு வாட்ஸ்அப், பேஸ்புக். எஸ்.எம்.எஸ் மூலமாக  எதையாவது அனுப்பிக்கொண்டு இருக்கிறீர்களோ, அவர்கள் எல்லோரும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்ய தகுதியானவர்களே.

இவ்வளவு சுலபம்னு தெரிஞ்சிருந்த இந்நேரம் எவ்வளவோ செஞ்சிருக்கலாமே னு மனசுக்குள்ள பட்டம்பூச்சி பறக்குதா?

ஒரு நிமிஷம். இப்போ நம்ம பேசியது எல்லாம் பேசிக் தான், இன்னும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் உள்ளே சில விஷயங்கள் இருக்கிறது. அதையெல்லாம் போக போக பொறுமையா சொல்லித்தரேன்.

பொறுமையா நல்ல புள்ளைய எல்லாத்தையும் கேட்டுகிட்டு, வீட்டுக்கு நல்ல பையனா நெறைய சம்பாதித்து குடுங்க. எல்லாம் ரொம்ப சந்தோஷப்படுவாங்க.

வருகின்ற சில ஆண்டுகளுக்கு டிஜிட்டல் மார்கெட்டிங் துறையில் பெரிய அளவில் வேலைவாய்ப்பு இருக்கிறது என்று சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றது.

சரி இந்த துறையில் எப்படி நுழைவது, கற்று தேர்ந்த பிறகு வாய்ப்புகளை எப்படி பெற்று சுகமாக வாழ்வது? 

டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் நுழைய

ஈமெயில் மார்க்கெட்டிங்

எஸ்.ஈ.ஒ (சர்ச் என்ஜின் ஆப்டிமைஷேசன்)

பேஸ்புக் மார்க்கெட்டிங்

சோசியல் மீடியா மார்கெட்டிங்

மொபைல் மார்க்கெட்டிங்

போன்றவைகளை கற்றுக்கொள்ள வேண்டும். என்னை பொறுத்த வரையில் எல்லாமே கற்றுக்கொள்ள கொஞ்சம் ஈசிதான். இருந்தாலும் சுயமாக சிந்திக்கும் அறிவும், ஆங்கிலம் புரிந்துக்கொண்டு படிக்கும் அறிவும் இருந்தால் கொஞ்சம் நல்லது.

இதையெல்லாம் தமிழில் நமது டெக்குணா வெப்சைட் மூலமாகவே  நீங்கள் கற்றுக்கொள்ளலாம். ஓரளவு கற்றுக்கொண்ட பிறகு சென்னை, பெங்களூர், மும்பை போன்ற பெரு நகரங்களில் உள்ள நிறுவனங்களில் வேலைக்கு செல்லலாம்.

அடுத்த வாரம் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் பெரிதாக சாதித்து கொண்டிருக்கும் சிலரை பற்றிய தகவல்களை பற்றி பார்போம்.

மீண்டும் வருவேன்!

குணா.

அதற்கு முன் நீங்கள் இந்த கட்டுரைகளை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதை பற்றி எனக்கு ஒரு வரி எழுதினால் கூட நான் அதிகம் சந்தோஷம் அடைவேன். அதுவே நான் அடுத்த பகுதி எழுத தூண்டுதலாக இருக்கும். 

எனது ஈமெயில்: inboxmeguna@gmail.com

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.