Home » பொதுவானவை » தூங்கும் முறைகள் உங்களுக்கு தெரியுமா?
தூங்கும் முறைகள் உங்களுக்கு தெரியுமா?

தூங்கும் முறைகள் உங்களுக்கு தெரியுமா?

தூக்கம் ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்று. ஒரு மனிதன் எந்த அளவு கஷ்டத்தில் இருந்தாலும் தூங்கும்போது அவன் தன்னையும் இந்த உலகத்தையும் மறந்து நிம்மதி அடைகிறான்.

தூங்குவதில் நாம் எல்லோரும் ஒவ்வொரு ராகம், ஒரு சிலர் மல்லாந்து படுத்து தூங்குவோம், ஒரு சிலர் ஒருக்களித்து படுத்து தூங்குவோம், ஒருசிலர் குப்புற படுத்து தூங்குவோம். கடைசியில் அவரவர், தன் விருப்பதுக்கு ஏற்ப ஏதோ ஒரு நிலையில் தூங்கினாலும், தூங்குவதர்கென்று சில முறைகளும், காலங்களும் இருக்கின்றது. அதன்படி தூங்கினால், நல்ல தூக்கமும் வரும், உடலுக்கும் தூக்கத்தின் மூலம் கிடைக்கவேண்டிய நற்பலன்களும் கிடைக்கும்.

எப்போதும் கிழக்கு முகமாக தலைவைத்து படுப்பது நலம் தரும் ,

தெற்கில் தலை வைத்து படுத்தால், ஆயுள் வளரும் என்பார்கள்

மேற்கில் தலைவைத்து படுத்தாலும் நல்லதுதான், ஆனால் கெட்ட கனவு, அதிர்ச்சி தோன்றலாம் என்கிறார்கள் சித்தர்கள் (எனக்கு தோன்றியதில்லை)

ஆனால் எக்காரணத்தை கொண்டும் வடக்கில் தலைவைத்து படுக்க கூடாது, சும்மா வடக்கில் தலை வைத்து படுக்காதே என்று சொல்லாமல், கொஞ்சம் அறிவியல் ரீதியா  பார்தோமானால்.

பூமியின் வடமுனையிலிருந்து தென் முனைக்கு கதிரிழுப்பு விசை இயங்கிக்கொண்டிருக்கும், அந்தசமயம் நாம் வடக்கில் தலை வைத்து படுக்கும் போது மூளை பகுதி அந்த விசையால் நல்ல ஓய்வு பெறமுடியாமல் போய்விடும். அதுமட்டுமில்லாமல் நாம் சுவாசிக்க சரியான பிராண வாயுவும் கிடைக்காமல் போவதால் தேவையில்லாத நோய்கள் நம்மை அண்டிவிடும். இதனால் தான், பல பேர் ரொம்ப நேரம் தூங்கி எழுந்தாலும், “சரியா தூங்குல” என்பார்கள்.

படுக்கும்போது, இடதுபுறமாக படுக்க வேண்டும். இடது கையை மடக்கி தலையின் கீழே வைத்துக்கொள்ளவேண்டும். இடது காலை மடக்கி ஒருக்களித்து அதன் மேல் வலதுகாலை நேரே போட்டு அதன் மேல் வலது கையை வைத்து உறங்க வேண்டும்.

இதுவே உறங்குவர்தற்கான சரியான முறை, எக்காரணத்தை கொண்டும் மல்லாந்தோ, குப்புறமாகவோ படுப்பது அவ்வளவு நல்லதில்லை.

மல்லாந்தோ, குப்புறமாகவோ படுப்பதால் சரியான பிரணவாயு கிடைக்காது. சிறுநீரக கற்கள் ஊருவாக வாய்ப்பும் உள்ளது.

இறுதியாக பகலில் உறங்குவதை தவிர்த்து, இரவில் தூங்குவது உடலுக்கு நலம் பயக்கும்.

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள்

 

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.