Home » கணினி » பேஸ்புக்கில் இனி தேங்க்யூ சொல்லுங்கள்
பேஸ்புக்கில் இனி தேங்க்யூ சொல்லுங்கள்

பேஸ்புக்கில் இனி தேங்க்யூ சொல்லுங்கள்

சமுக வலைதளமான பேஸ்புக்கில் இது வரை நாம் லைக், கமெண்ட், ஷேர் செய்திருப்போம். ஆனால் இனிமேல் நீங்கள் தேங்க்யூ சொல்லலாம். அதுவும் வீடியோ வடிவில்.உங்கள் நண்பரின் மனதை தொடும் வகையில் அவருக்கும் உங்களுக்குமான நட்பை அழகான தேங்க்யூ வீடியோ மூலம் நீங்கள் வெளிபடுத்த முடியும்.

முதலில் இந்த லிங்கு வழியாக https://www.facebook.com/thanks சென்று பிறகு நீங்கள் தேங்க்ஸ் சொல்ல விரும்பும் நண்பரின் பெயரை இடது பக்கத்தில் இருந்து தேர்வு செய்துகொள்ளுங்கள்.

பின் கீழே இரண்டு தீம்கள் இருக்கும். அதில் எதாவது ஒன்றை செலக்ட் செய்து கொள்ளுங்கள். பின் நீங்கள் எதாவது புதிதாக படங்கள் இணைக்க விரும்பினால் கீழே அதற்கான இடத்தில இணைத்து கொள்ளுங்கள்.

இப்போது உங்கள் தேங்க்யூ வீடியோ தயாராகிவிடும். பின் மேலே வலது மூலையில் உள்ள ஷேர் வீடியோ என்ற பொத்தானை அழுத்தி வீடியோவை உங்கள் நண்பரின் டைம்லைனில் நீங்கள் பதிவு செய்யலாம்.

இந்த தேங்க்ஸ் வீடியோவை உங்கள் நண்பர்களும், அவரின் நண்பர்களும் பார்க்க முடியும். இந்த புதிய சேவை பேஸ்புக் பயனாளிகளின் மனதை கவருமா என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.