Home » பொதுவானவை » நேர்மைக்காக குவியும் டாலர்கள்
நேர்மைக்காக குவியும் டாலர்கள்

நேர்மைக்காக குவியும் டாலர்கள்

ஒருவரிடம் இருந்து உதவி பெறுவதை விட, உதவி செய்வதில் தான் அதிக ஆனந்தம் உண்டு என்பதை இந்த வருட கிறிஸ்துமஸ் மூலம் அமெரிக்கர்கள் உணர்ந்து இருக்கிறார்கள். இதற்க்கு காரணம் அதிர்ஷ்ட பரிசு யாருக்கும் கிடைத்து விடவில்லை.  மாறாக தாம்சன் என்ற மனிதருக்கு உதவியதே .

அமெரிக்கா இளைஞரான ஜோஷ் பேலர் லின் (Josh Paler Lin ) யூ டியூப் இணையத்தில் மிகவும் பிரபலமானவர். இவர் வழக்கமாக குறும்பு நிகழ்ச்சிகளை தனது நண்பர்களிடம் நிகழ்த்தி அதை தனது  யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்வார். இந்த வீடியோக்களை கண்டு ரசிக்க ஒரு கூட்டமே அவரை யூடியூப்ல் பின்தொடர்கிறது.

அப்படி அவர் சமீபத்தில் வெளியிட்ட “வீடில்லா மனிதர் $100 எப்படி செலவு செய்வார்” என்ற வீடியோ யூ டியூப் தளத்தையும், அமெரிக்கர்களின் மனதையும் ஒரு சேர உலுக்கி எடுத்துவிட்டது.

இந்த வீடியோவின் படி, ஜோஷ் வீடில்லா மனிதர் ஒருவரை கண்டுபிடிக்கிறார், அவரிடம் 100 டாலரையை கொடுக்கிறார். இதன் பின் வீடில்லா மனிதரிடம் இருந்து விடைபெற்று கொள்கிறார் ஜோஷ். ஆனால் ஜோஷ்ன் கேமரா அந்த மனிதரை ரகசியமாக பின்தொடர்கிறது. அந்த $100 டாலரையை வாங்கிய அந்த மனிதர் நேராக மதுபான விடுதிக்கு செல்கிறார். சிறிது நேரம் கழித்து அந்த வீடில்லா மனிதர் பெரிய பொட்டலத்துடன் வெளியே வருகிறார். பின் தன்னை போலவே வீடு இல்லாமல், பூங்காக்களில் வசிக்கும் ஏழைகளுக்கு மதுபான விடுதியில் இருந்து வாங்கி வந்த உணவை விநியோகிக்கிறார் அந்த வீடில்லா மனிதர்.

இந்த சம்பவங்கள் அனைத்தையும் ரகசியமாக படம் எடுத்து கொண்டிருந்த ஜோஷ் திரும்ப அவர் முன் தோன்றுகிறார். பின், அந்த மனிதரிடம் அவரை தப்பாக நினைத்ததற்கு தனது மன்னிப்பை கேட்டுகொள்கிறார்.

அப்போது அந்த மனிதர், ” பணத்தை வாங்கி குடிப்பேன் என்று நினைத்தீர்கள்? ” அதையும் தாண்டி இது போன்ற சந்தோஷங்கள் நிறைய உண்டு என்று கூறுகிறார்”. இதை கேட்டு மனம் உருகிய ஜோஷ் திரும்ப 100 டாலர்களை அந்த மனிதரிடம் கொடுக்கிறார். முதலில் அந்த பணம் வேண்டாம் என்று சொல்கிறார், பிறகு ஜோஷின் வற்புறுத்தலால் பெற்றுகொள்கிறார்.

இப்போது ஜோஷ் அந்த மனிதரின் பின்னணியை கேட்கிறார் .

தாமஸ் என்ற பெயர் கொண்ட அந்த நபர், நோய்வாய்பட்டு இறந்து போன, தனது தாய் தந்தையை பார்த்துகொள்வதற்காக வீடு, வேலையை இழந்து இந்த நிலைமையில் இருப்பதாக கூறுகிறார். பின் தாமஸிடம் எந்த உதவி வேண்டுமானாலும் என்னை கேட்கலாம் என கூறிவிட்டு விடைபெறுகிறார் ஜோஷ்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் வீடியோவாக யூடியூப்ல் பதியப்பட்டது. பின் இதை பார்த்த பல அமெரிக்க மக்கள் பலர், தாங்கள் இது போன்ற மனிதரை பார்த்தது இல்லை, வீடில்லாமல் தெருக்களில் அலையும் இவர்கள் குடித்து விட்டு குற்றங்களில் ஈடுபடுவார்கள் என்று நினைத்தோம். ஆனால் தாமஸ் எங்கள் எண்ணத்தை மாற்றி விட்டார் என கூறி, தாமசுக்கு வாழ்த்து செய்திகள் அனுப்பிகொண்டிருக்கிறார்கள்.

இதுமட்டுமின்றி, தாமசுக்கு உதவும் நோக்கில் ஜோஷால் உருவாக்கப்பட்ட இணையபக்கத்தில் அவருக்கு நிதி உதவியும் குவிந்தவண்ணம் உள்ளது.

https://www.indiegogo.com/projects/help-thomas-to-get-a-fresh-start       

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.