Home » பொதுவானவை » ஆன்லைனில் முன்பதிவு செய்து ராஷ்டிரபதி பவனை சுற்றலாம்
ஆன்லைனில் முன்பதிவு செய்து ராஷ்டிரபதி பவனை சுற்றலாம்

ஆன்லைனில் முன்பதிவு செய்து ராஷ்டிரபதி பவனை சுற்றலாம்

இந்தியனா பிறந்துட்டு வாழ்கையில ஒரு முறையாவது ராஷ்டிரபதி பவனை பார்கலனா எப்படி? என நீங்கள் நினைத்தால், இந்த செய்தி உங்களுக்குத்தான் . கிரேக்க கட்டுமான முறையில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டு இன்றும் அதனுடைய அழகும், கம்பீரமும் குறையாமல் நிற்கும் ராஷ்டிரபதி பவனில் உங்களுடைய காலடி பட ஒரு வாய்ப்பு  .  

19,000 சதுக்க மீட்டர் பரப்பளவு கொண்ட ராஷ்டிரபதி பவன் டெல்லியில் அமைந்துள்ளது. ராஷ்டிரபதி பவனுள்  குடியரசு தலைவர் இல்லம், அதிகாரிகளின் அலுவலகங்கள், திறந்தவெளி தோட்டங்கள் போன்றவை இயங்கிவருகிறது .

இப்படிப்பட்ட நாட்டின் சிறப்பு மிக்க இந்த இடத்தை நீங்கள் சுற்றி பார்க்க விரும்பினால், ஆன்லைன் மூலம் பதிவு செய்து சுற்றிப்பார்க்கலாம்.

பதிவு செய்யும் வழிமுறை

1. முதலில் இந்த தளத்துக்கு செல்லுங்கள் https://presidentofindia.gov.in/rbvisit/rbvisit.aspx

2. பிறகு “click here for online booking” என்பதை கிளிக் செய்யுங்கள்.

3. இப்போது குழு விபரம் பற்றிய பக்கத்தில் உங்கள் குழுக்களில் உள்ள மொத்த    நபர்களின் எண்ணிக்கை பற்றி தெரிவிக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகள், மற்றும் பெரியவர்கள் விபரம்.

4. பிறகு ராஷ்டிரபதி பவனை சுற்றிபார்க்க விரும்பும் நாள் ,நேரம் குறிப்பிட வேண்டும். பவனை சுற்றிபார்க்க  நபர் ஒருவருக்கு ரூபாய்.25, பத்து பேருக்கு மேற்பட்ட குழுவாக இருப்பின் ஒரே கட்டணமாக ரூபாய்.600 செலுத்தவேண்டும்.

5. தகவல்கள் அனைத்தையும் பூர்த்தி செய்த பிறகு next என்பதை கிளிக் செய்யுங்கள்.

6. இப்போது தோன்றும் திரையில் உங்களுடைய சுயவிபரங்கள் மற்றும் உங்களுடன் வருபவர்களுடைய விபரங்கள் அனைத்தையும் பதிவிட வேண்டும். இதனுடன் நீங்கள் எடுத்து செல்ல நினைக்கும் அடையாள அட்டையின் விபரம் பற்றியும் தெரிவிக்கவேண்டும். இதற்க்கு ஆதார் கார்டு சிறந்தது.

7. மேலே சொல்லப்பட்ட அனைத்தையும் முடித்த பின்னர் submit கொடுங்கள் .

8. இப்போது நீங்கள் சுற்றிபார்க்க விரும்பிய தேதி மற்றும் நேரத்துடன், நீங்கள்  செலுத்த வேண்டிய தொகை உங்களுக்கு காண்பிக்கப்படும்.

9. Pay என்ற பட்டனை கிளிக் செய்து பணத்தை செலுத்துங்கள்.

10 . பணம் செலுத்திய பின்னர், உங்களுக்கு பதிவு செய்ததற்கான பதிவு எண் எஸ்.எம்.எஸ் அல்லது மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டு, உங்கள் விண்ணப்பம் ராஷ்டிரபதி அதிகாரிகளால் பரிசிலிக்கபட்டு அனுமதி வழங்கபடும்.

11. இதன் பின்னர் குறிப்பிட்ட தேதியில் நீங்கள் ராஷ்டிரபதி பவனை வலம் வரலாம்.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.