Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » கணினி » விண்டோஸ் 93 இயங்குதளத்தை இயக்கி பார்க்க ஆசையா ?
விண்டோஸ் 93 இயங்குதளத்தை இயக்கி பார்க்க ஆசையா ?

விண்டோஸ் 93 இயங்குதளத்தை இயக்கி பார்க்க ஆசையா ?

இயங்குதளம் என்றால் அது விண்டோஸ்தான் என சொல்லலாம். அந்த அளவிற்கு விண்டோஸ் இயங்குதளங்களை நாம் பயன்படுத்திவருகிறோம். உலகில் உள்ள முக்கால்வாசி கணினிகள் இந்த இயங்குதளத்தை பயன்படுத்தியே உயிர் வாழ்கின்றன.

தற்போது, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த  ஓவியர்களான ஜாகேன் பாப், சாம்பெக்ட்ரோ ஆகிய இருவரும் கற்பனை அடிப்பையில் விண்டோஸ் 93 என்ற இயங்குதளத்தை இணையத்தில் உலவ செய்துள்ளனர். விண்டோஸ் 10 வரைக்கும் நாம் முன்னேறி சென்று விட்டாலும், இன்றளவும் பலருக்கு விண்டோஸ் எக்ஸ்.பீ , 95 போன்ற இயங்குதளங்களை திரும்ப  இயக்கி பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

windows 93

 

இவர்கள் அறிமுகம் செய்துள்ள விண்டோஸ் 93 இயங்குதளத்தை இயக்க இந்த தளத்திற்குள் சென்றால் போதும், விண்டோஸ் 93 அழகான ஒலியோடு உங்களை வரவேற்கிறது.

அழகான டெஸ்க்டாப்பில் நாம் சிறு வயதில் விளையாடிய   காஸ்டில் 3D, ஸ்டார் வார் போன்ற விளையாட்டுகள் வரிசை கட்டி நிற்கின்றன.

வெப் டிசைனிங் கற்று கொள்ள ஆசையா .. இத படிங்க

உங்கள் டெஸ்க்டாப்பில் இருந்து C டிரைவ்க்கு செல்லலாம். உள்ளே சில படங்கள் இருக்கிறது. இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கிறது .பாருங்கள்.

இந்த தகவல் பிடித்தால் சமுக வலையில் பகிருங்கள். உங்கள் நண்பர்களும் பயன்படுத்தி பார்க்கட்டும்.

விண்டோஸ் 93 யை இயக்க கிளிக் செய்யுங்கள்

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.