Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » கணினி » வை-பை பாதுகாப்பது எப்படி ?
வை-பை பாதுகாப்பது எப்படி ?

வை-பை பாதுகாப்பது எப்படி ?

இணையம் இல்லா வீடுகள் இல்லை என சொல்லும் அளவிற்கு, இன்று எல்லோரது வீட்டிலும் இணைய இணைப்புகள் இருக்கின்றன. வீட்டில் உள்ள எல்லோரும் எல்லா விதமான கருவீகளிலும் பயன்படுத்த ஏதுவாக வை-பை (wi-fi) ரௌடர்களை பயன்படுத்துகிறோம். அப்படி பயன்படுத்தும் பல பேருக்கு அதை பாதுகாப்பது எப்படி என்பது தெரியவில்லை. இதோ அவர்களுக்காக இந்த பதிவு 

கடவுச்சொல் – காக்கும் சொல்

வீட்டில் ரௌட்டர் இன்ஸ்டால் செய்யும் போதே, கடவுச்சொல்லை பதிந்துவிடுங்கள். உங்களுக்கு தெரியவில்லை என்றாலும், இணைய இணைப்பு கொடுக்க வரும் நிறுவன தொழில்நுட்ப நபரிடம், இது பற்றி கூறி கடவுச்சொல் அமைத்துக்கொள்தல் சிறந்தது.

இயல்பு நிலை கடவுசொல்லை மாற்றுங்கள்  

பலர் இயல்பாக ரௌடர் வாங்கும் போது ஏற்கனவே செட் செய்யபட்டு வரும் இயல்பு நிலை (Default) கடவுசொல்லையே பயன்படுத்துவார்கள்.  இது ஒரு தவறான செயல். இயல்பு நிலை கடவுச்சொல்லை மாற்றியமைப்பதோடு, வலிமையான கடவுச்சொல்லை பயன்படுத்துவது சிறந்தது. உங்கள் கடவுச்சொல்லில், நம்பர், பெரிய எழுத்து, சிறிய எழுத்து, சிறப்பு குறியீடுகள் கலந்திருத்தால் அவசியம்.

அணைத்து வையுங்கள்

வை-பை தேவையில்லாத நேரத்தில் அணைத்து வையுங்கள். இது தேவையில்லாத பிரச்சினைகளுக்கு சிறந்த முடிவாக இருக்கும்

இந்த பெயர்களை பயன்படுத்தலாம்

பொதுவாக, நமது வை-பை நெட்வொர்க்களுக்கு நாம் நமது பெயரையோ, நிறுவன பெயரையோ, இன்னும் சில பேர் வை-பை என்றே பெயர் வைத்திருப்பார்கள். இது போன்ற பெயர்களை விட்டுவிட்டு, Virus Upload , local:virus.exe, trojan attack போன்ற பயமுறுத்தும் பெயர்களை வைத்துக்கொள்ளுங்கள். இது சில வை-பை நெட்வொர்க்களை திருட நினைக்கும் ஆசாமிகளை உங்கள் வை-பையை விட்டு கொஞ்சம் தள்ளிவைக்கும்.

இந்த கட்டுரை பிடித்திருந்தால் சமுக வலையில் பகிருங்கள்.  எல்லோருக்கும் உதவியாக இருக்கும்.                 

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.