Home » பொதுவானவை » அவசரம் – 100 ரூபாய் நோட்டு
அவசரம் – 100 ரூபாய் நோட்டு

அவசரம் – 100 ரூபாய் நோட்டு

நேற்று இரவிலிருந்து 500, 1000 என்ற வார்த்தைகள் நமது எல்லோர் காதிலும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. பலர் அரசு இதை செய்வதற்கு முன்பு நடுத்தர மக்களை கவனத்தில் கொண்டு அவகாசம் கொடுத்திருக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். அப்படி ஒருவேளை அவகாசம் கொடுத்திருந்தால், பல குள்ள நரிகளும் இதில் இருந்து தப்ப முயற்சி செய்திருப்பார்கள் நிச்சயம்.

அதனால் கருப்பு பணத்தை ஒழித்துகட்ட நிச்சயம் இது போன்ற தடாலடி அறிவிப்புதான் சரியாக இருக்கும் என்பது என் கருத்து.  அதிலும் பெட்ரோல் பங்க், ரயில், டிக்கெட் புக்கிங், பால் பூத், மருத்துவமனை போன்ற இடங்களுக்கு சலுகை வழங்கியிருப்பது நல்ல முடிவுதான் என்றாலும் நடுத்தரவாசிகள் காய்கறி, மளிகை போன்ற பொருட்களை வாங்கும்போது நிச்சயம் சிரமம் ஏற்படும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

மோடி சொன்னது போல, நாடு சிறக்க இரண்டு மூன்று நாட்கள் எல்லா சிரமம்களையும் நாட்டு மக்கள் பொறுத்துதான் ஆகவேண்டும்.

குறிப்பு: நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, செக், டிடி பரிவர்த்தனைகளுக்கு எந்த தடையும் இல்லை என்பதால் முடிந்த வரையில் இந்த சேவைகளை கொண்டு பணம் செலுத்த முயற்சி செய்யுங்கள்.

உணவுக்கு ஒருவேளை பணம் இல்லையெனில், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு ஸ்கரச் செய்யும் வசதி உள்ள கடைகளை பார்த்து சாப்பிடலாம்.

அல்லது

Foodpanda.in போன்ற வெப்சைட்களில் ஆர்டர் செய்து சாப்பிடலாம். இந்த தளத்தில் பணம் செலுத்த ஆன்லைன் பேங்கிங் வசதி உள்ளது. ஆனால் சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டும்தான் இந்த வெப்சைட் பயன்படும்.

ஏதோ மேதாவி போல எனக்கு தெரிந்த சில விஷயங்களை நான் சொன்னாலும், இன்னும் பல இடங்களில் உடனடியாக பணம் கொடுக்க தேவை ஏற்படும் என்பது எனக்கும் தெரியும்.

அதற்கு , சில தினங்களுக்கு மட்டும் அக்கம் பக்கம் தெரிந்தவர், அறிந்தவர் என்று கொஞ்சம் வெட்கம் விட்டு கைமாத்து கொஞ்சம் வாங்கிக்கொள்ளலாம். எனக்கு தெரிந்து தற்போது இதைத்தவிர வேறு சிறந்த வழியில்லை. (இது ஒரு பெரிய ஐடியா இல்லை என்றாலும் உயிர் காக்கும் வழி என்பதை மறுப்பதற்கில்லை).

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.