Home » கணினி » 2015- ல் அதிகமாக கூகிளில் தேடப்பட்ட பொருட்கள் இதுதான்
2015- ல் அதிகமாக கூகிளில் தேடப்பட்ட பொருட்கள் இதுதான்

2015- ல் அதிகமாக கூகிளில் தேடப்பட்ட பொருட்கள் இதுதான்

கடந்த 2015 ஆம் ஆண்டு டிஜிட்டல் சாதனங்களின் பிரியர்களுக்கு சிறந்த ஆண்டு என்றே சொல்ல வேண்டும். கடந்த வருடம் நீண்ட காலமாக எதிர்பாத்திருந்த பல தொழில்நுட்ப சாதனங்கள் விற்பனைக்கு வந்தது நம் அனைவருக்கும் தெரிந்ததே.
இருப்பினும், கடந்த வருடம் கூகிளில் அதிகமாக தேடப்பட்ட பொருட்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதனை தற்போது பார்ப்போம்.

ஐபோன் 6 எஸ் – இந்த பெயர் மட்டும் சுமார் 41 மில்லியன் முறைகள் தேடப்பட்டுள்ளது. அதுவும் கடந்த செப்டம்பர் மாதத்தில் இதனை பலர் தேடியுள்ளனர். அது ஏன் செப்டம்பர் மாதம் என்றால், அந்நேரத்தில் தான் ஐபோன் 6 எஸ் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆப்பிள் வாட்ச்: கடந்த பிப்ரவரி மாதம் முதல் சுமார் 17 மில்லியன் முறைகள் இதுபற்றி இணையத்தில் தேடப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸீ எஸ் 6: கடந்த பிப்ரவரியில் தொடங்கிய இந்த தேடுதல் மார்ச் மாதத்தில் உச்சமாக 21 மில்லியனை தொட்டது.

இதே போன்று, இதற்க்கு அடுத்தப்படியாக நேக்சேஸ் 6, மைக்ரோசாப்ட் சர்பேஸ், ஐ பாட் ப்ரோ போன்றவைகள் இடம் பிடித்துள்ளன.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.