Home » மொபைல் » 30 பில்லியன் தகவல்களை கையாளும் வாட்ஸ்அப்
30 பில்லியன் தகவல்களை கையாளும் வாட்ஸ்அப்

30 பில்லியன் தகவல்களை கையாளும் வாட்ஸ்அப்

குறுஞ்செய்தி உலகை ஆளும் வாட்ஸ்அப் பற்றி முன்னுரை எதுவும் தேவையில்லை. ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இந்த அப்ளிகேஷன் பற்றி தெரிந்திருக்கும்.

கடந்த வாரம் வாட்ஸ்அப் தலைமை நிர்வாக அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி வாட்ஸ்அப் தற்போது தினசரி 30 பில்லியன் தகவல்களை கையாண்டு வருகிறது. இது சராசரியாக அனுப்படும் குருந்செய்தி அளவுகளை விட 50% சதவிகிதம் அதிகம். தற்போது உலகம் முழுதும் 700 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்ட வாட்ஸ்அப் மூலம் நொடிக்கு 347,222 குறுஞ்செய்திகள் பரிமாறப்படுவது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப், வீ  சாட், ஹைக், வைபர், லைன்  போன்ற மொபைல் அப்ளிக்கேஷன்களின் வருகையால் பாரம்பரிய குறுஞ்செய்தி அனுப்பும் முறை குறைந்து வருவது நினைவில்கொள்ளத்தக்கது.

 

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.