Home » பொதுவானவை » அலெக்ஸாண்டரின் இந்திய படையெடுப்பு
அலெக்ஸாண்டரின் இந்திய படையெடுப்பு

அலெக்ஸாண்டரின் இந்திய படையெடுப்பு

இந்த இந்திய மண்ணில் பல ஆயிரம் உயிர்கள் பிறந்து மாண்டு போய் இருக்கின்றன.  அதில் குறிப்பாக போர் நேரங்களில் எத்தனை எத்தனை  உயிர்கள் பறிபோயின என்று யாராலும் சொல்லமுடியாது. பல யுத்தங்கள், வீழ்ச்சிகள் என்று பலவற்றை கடந்துதான் இன்று இங்கே வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்.

உலகத்தை வெல்ல வேண்டும் என்று மன்னன் அலெக்ஸாண்டர் கிளம்பியபோது இந்தியா மவுனாமாக சிறிய சலனத்தோடு சில மன்னர்களால் ஆளப்பட்டு கொண்டிருந்தது.

அலெக்ஸாண்டரின் வருகை நமக்கு மேற்கு கலாச்சாரத்தையும், நமது வீரத்தையும் நமக்கு புரியவைத்தது. 326 கி.மூ வில் அலெக்சாண்டர் அடி எடுத்து வைத்த போது முதல் ஆளாக அம்பி என்ற மன்னன் அலெக்ஸாண்டரிடம் தன் ராஜ்ஜியத்தை ஒப்படைத்துவிட்டு சரணடைந்தான்.

என்னோடு போட்டிப்போட யாருமே இல்லையா என்று நினைத்த அலெக்ஸாண்டரின் எண்ணத்தை மாற்றி அமைத்தவன் போரஸ் என்ற புருஷோத்தமன். வெளிநாடுகளில் இருந்து படை எடுத்து வந்த அரசர்கள் எல்லோருக்கும் ஒரு பயம் பொதுவானதாகவே இருந்தது என்றால் அது யானை படை .

கருத்த, புடைத்த பெரிய மிருகம் தன்னை நோக்கி ஆரவாரத்துடன் ஓடிவரும்போது பயம் என்றால் என்னவென்று தெரியாத மன்னர்களும் ஒரு நிமிடம் ஆடிப் போனார்கள் என்றே சொல்லவேண்டும். அந்த வகையில் அலெக்ஸாண்டருக்கும் அந்த பயம் இருந்திருக்கும் என்று சில வரலாற்று வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஜீலம் நதிக்கரையின் ஓரத்தில் இருப்படைகளும் மோத அலெக்ஸாண்டரின் படை வீரர்கள் பல நாடுகளில் முன்பு போட்டு வந்த சண்டையினால் களைப்படைந்து ஓடுகிறார்கள். இங்கு போரஸின் படை முன்னேறுகிறது. வீரர்கள் அஞ்சி ஓடுவதை சற்றும் பொறுத்துக்கொள்ளமல் , அலெக்ஸாண்டரே முன்னேறி சென்று தனியாளாக மன்னன் போரசை தாக்குகிறான். இதை கண்டு மற்ற வீரர்களும் அலெக்ஸாண்டரோடு சேர்ந்து கொள்கிறார்கள்.

போரஸின் பக்கம் முடியவேண்டிய போர் அலெக்ஸாண்டரின் பக்கம் முடிவடைகிறது. மன்னன் போரஸின் வீரத்தை பாராட்டி என்ன வேண்டும் என்று கேட்கிறான் அலெக்ஸாண்டர். அதற்க்கு போரஸ் தன்னை ஒரு மன்னன் போல நடத்தவேண்டும் என்று கொஞ்சமும் பயம் இல்லாமல் துணிவுடன் கேட்கிறான்.

இவன் துணிவு அலெக்ஸாண்டருக்கு பிடித்து போக போரஸின் நாட்டை அவனிடமே கொடுத்துவிட்டு தாயகம் திரும்புகிறான் அலெக்ஸாண்டர்.

இப்படி உலகை வெல்ல வேண்டும் என்ற ஆசையின் எல்லையை தொடமுடியாமாலயே கி.மூ 323 ல் இறந்து போகிறான் அலெக்ஸாண்டர்.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.