Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » பொதுவானவை » அம்பானியின் கார் விலை என்ன தெரியுமா ?
அம்பானியின் கார் விலை என்ன தெரியுமா ?

அம்பானியின் கார் விலை என்ன தெரியுமா ?

இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானியை பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அவர் என்ன கார் பயன்படுத்துகிறார். அதன் விலை என்ன என்பது போன்ற விஷயங்கள் பலருக்கு தெரிந்திருக்காது. இதோ உங்களுக்காக இந்த பதிவு

திரு. முகேஷ் அம்பானி, பீ.எம்.டபிள்யூ 760i என்ற காரை பயன்படுத்துகிறார். இந்த காரின் விலை 1.9 கோடிதான். ஆனால் துப்பாக்கி சூடு போன்ற அசம்பாவித சம்பவங்களில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக இந்த கார் ஜெர்மனியில் இன்னும்  மெருகேற்றப்பட்டதால் இதன் அடக்க விலை 8.5 கோடி.

இதுமட்டும் இல்லாமல், பாதுகாப்பு அம்சங்களுக்காக மெருகேற்றப்பட்ட வெளிநாட்டு கார்களை இந்தியர்கள் வாங்கும், இந்திய அரசுக்கு 300% வரி செலுத்த வேண்டும். நிச்சயமாக இதற்க்கு சில பல லட்சங்கள் செலவாகியிருக்கும்.

அதன் பின், நம்மூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய ஒரு பெரும் தொகை செலவு செய்திருக்க வேண்டும். இப்படி எல்லாத்தையும் கூட்டி, கழித்து பார்த்தோமென்றால், ஒரு 9 அல்லது 10 கோடியை ரவுண்டாக  வைத்துக்கொள்ளலாம்.

இது மட்டுமில்லாமல் ஒரு கூடுதல் தகவலையும் தெரிந்துக்கொள்ளுங்கள்.  முகேஷ் அம்பானி தன்னுடைய பாதுகாப்பு பிரிவிற்காக மட்டும் மாதா மாதம் 15 லிருந்து 16 லட்சம் வரை செலவு செய்கிறாராம்.

என்ன தலை லைட்ட சுத்துதா ?

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.