Home » மொபைல் » ஆன்ட்ராய்டு N – புதிய வசதிகள்
ஆன்ட்ராய்டு N – புதிய வசதிகள்

ஆன்ட்ராய்டு N – புதிய வசதிகள்

உலகில் உள்ள ஸ்மார்ட் போன்களை இயக்கி கொண்டிருக்கும் இயங்கு தளங்களில் ஆன்ட்ராய்டுக்கு முக்கிய பங்கு உண்டு. இது கூகிளின் துணை நிறுவனமாக இருப்பதாலும், பயன்படுத்துவதற்கும் எளிமையாக இருப்பதாலும் ஆன்ட்ராய்டு ஃபோன்களை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கூகிள் ஆன்ட்ராய்டு பதிப்புகளை அவ்வபோது புதிது புதிதாக வெளியிட்டு கொண்டே இருக்கிறது.

அதன் படி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆன்ட்ராய்டு N என்ற பெயரில் புதிய ஆன்ட்ராய்டு பதிப்பினை வெளியிட்டு உள்ளது. தற்போது சோதனை பதிப்பாக கிடைக்கும் இந்த ஆன்ட்ராய்டு N இன்னும் சில மாதங்களில் ஃபோன்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு உங்கள் கைகளில் கிடைக்கும்.

சிறப்பு வசதிகள் என்ன?

மல்டி விண்டோஸ்

Multi windows android N

ஒரே சமயத்தில் இரு வேறு பட்ட ஆப்களை  திறந்து இடது புறத்தில் ஒன்றும் வலது புறத்தில் ஒன்றுமாக வைத்து பயன்படுத்த முடியும்.

நோடிபிக்கேஷன்

direct-reply

ஈமெயில், மெசேஜ் போன்றை வந்தால் நமக்கு நோடிபிக்கேஷன் காட்டும். பிறகு நாம் அந்த பகுதியை கிளிக் செய்தால், சம்பந்தப்பட்ட ஆப் க்குள் சென்று நமக்கு வேண்டியதை செய்வோம். இனி அப்படி செய்ய தேவையில்லை. நோடிபிக்கேஷன் தோன்றும் இடத்திலேயே ரிப்ளை செய்ய முடியும்.

படிங்க: http://விவோ 6 ஜிபீ ரேம் கொண்ட முதல் போன்

பேட்டரி &  டேட்டா

பேட்டரி, ரேம் போன்றவற்றின் தரத்தினை பாதுகாக்கும் வகையில் ஆன்ட்ராய்டு N ல் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது. அதே போன்று தேவையில்லாமல் இன்டர்நெட் பயன்படுத்தும் செயலிகளையும் நாம் கண்டு கட்டுப்படுத்த முடியும்.

இது போன்று இன்னும் ஏராளமான வசதிகள் ஆன்ட்ராய்டு N ல் இருக்கிறது. முழுமையான பதிப்பு வெளிவரும் போது அவையனைத்தும் தெரிய வரும்.

உங்களுக்கு கணினி குறித்து சந்தேகம் இருந்தால் இங்கே கிளிக் செய்து உங்கள் கேள்விகளை பதியலாம்.

என் இலவச கணினி ஆலோசனைகள் மற்றும் கணினி குறித்த பதிவுகளை இலவசமாக பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.  

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.