Home » கணினி » குறைந்த செலவில் ஆப்பிள் கம்ப்யூட்டரை வீட்டில் அமைப்பது எப்படி ?
குறைந்த செலவில் ஆப்பிள் கம்ப்யூட்டரை வீட்டில் அமைப்பது எப்படி ?

குறைந்த செலவில் ஆப்பிள் கம்ப்யூட்டரை வீட்டில் அமைப்பது எப்படி ?

எல்லோருக்கும் ஆப்பிள் கம்ப்யூட்டர் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இதற்கெல்லாம் காரணம் அதன் வேகம், எளிய பயன்பாடு, எல்லாவற்றுக்கும் மேலாக நான் ஆப்பிள் கம்ப்யூட்டர் யூஸ் பண்றேன்பா என நண்பர்களுடன் பெருமையடித்துக் கொள்ளலாம். ஆனால் ஆசை மட்டும் இருந்தால் போதுமா ஆப்பிள் கம்ப்யூட்டர் வாங்க பணம் வேண்டுமல்லவா, அதனால் எளிய வழியில் குறைந்த செலவில் ஆப்பிள் கம்ப்யூட்டரை வீட்டில் அமைப்பது எப்படி என்று பார்க்கலாம்.

படிங்க: அமெரிக்க அதிபரின் செல்போன் ரகசியங்கள்?

குறைந்த செலவு என்று சொன்னேன் என்பதற்காக 10,000/- அல்லது 20,000/- த்தில் வேலையை முடித்து விடலாம் என்று எண்ண வேண்டாம். இதற்கு சுமார் 50,000 ரூபாய்  வேண்டும். சாதாரணமாக நல்ல ஆப்பிள் கணினி வாங்க வேண்டுமென்றால் ரூ. 1 முதல் 1.50 லட்சம் தேவைப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

நீங்கள் வாங்கவேண்டியவை

Dell E1916HV 18.5-inch LED Monitor (Black)- ரூ. 5,429.00 [ஆன்லைனில் வாங்க]

Apple Mac mini Dual-core i5 1.4GHz/4GB/500GB/HD Graphics 5000- ரூ. 37,990.00 [ஆன்லைனில் வாங்க]

mac mini

Dell Wireless Notebook Mouse (WM311) ரூ.1,299 [ஆன்லைனில் வாங்க ]

Apple Keyboard With Numeric Keypad Mb110Ll/B Keyboard- ரூ. 3,648.00 [ஆன்லைனில் வாங்க]

மொத்தம்: ரூ. 48,366/-

படிங்க: கணினி பழுது ஏற்பட்டால் சர்விஸ் செய்ய யாரிடம் கொடுக்கலாம் -தனியார் சர்விஸ் அல்லது கம்பெனி சர்விஸ்

அதாவது, நாம் ஆப்பிள் மானிட்டர் வாங்காமல் மற்ற நிறுவனங்களின் மானிடர் வாங்கி அதோடு, மாக் மினி (CPU) வாங்கி பயன்படுத்துவதால், எளிமையாக மாக் கம்ப்யூட்டரை வீட்டில் அமைத்து பயன்படுத்த முடியும்.

உங்களுக்கு கணினி குறித்து சந்தேகம் இருந்தால் இங்கே கிளிக் செய்து உங்கள் கேள்விகளை பதியலாம்.

என் இலவச கணினி ஆலோசனைகள் மற்றும் கணினி குறித்த பதிவுகளை இலவசமாக பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.  

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.