Home » கணினி » முட்டாள்கள் தினத்தில் வேலை இழந்த புத்திசாலிகள்- கூகிள்
முட்டாள்கள் தினத்தில் வேலை இழந்த புத்திசாலிகள்- கூகிள்

முட்டாள்கள் தினத்தில் வேலை இழந்த புத்திசாலிகள்- கூகிள்

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 1- ஆம் தேதி உலகம் முழுவதும் முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுவது அனைவரும் அறிந்த செய்திதான். அப்படி இந்த வருடம் கொண்டாடப்பட்ட முட்டாள்கள் தினத்தில், மற்றவர்களை முட்டாள்களாக மாற்ற நினைத்து கூகிள் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டுள்ளது.

எப்படி என்று தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கிறதா? தொடர்ந்து படியுங்கள்.

வழக்கமாக ஜீமெயில் உள்ள சென்ட் (Send) பட்டனோடு, முட்டாள்கள் தினத்தில் புதிதாக ஒரு சென்ட் பட்டனை கூகிள் சேர்த்திருந்தது. அந்த புதிய பட்டனுக்கு எதோ விஷேசங்கள் உள்ளது போல சித்தரிக்கப்பட்டிருந்ததால், பயனர்கள் அனைவரும் ஈமெயில் தயாரித்து முடித்ததும், அந்த பிரத்தியோக பட்டனை அழுத்தி தங்கள் ஈமெயில் சேர வேண்டியவருக்கு சேர்த்து விட்டதாக நினைத்து அடுத்த வேலையை பார்க்கப் போய் விட்டார்கள்.

gmail april prankஆனால் இங்கே தான் கூகுளின் கூத்து ஆரம்பமாகிறது. அந்த பிரத்தியோக சென்ட் பட்டனை யாரெல்லாம் அழுத்தி ஈமெயில் அனுப்பி இருந்தார்களோ, அவர்களின் இமெயிலில் எல்லாம் ஒரு கேலி செய்வது போன்ற பொம்மை படம் அனுப்பபட்டிருந்து. இதை தவிர்த்து அந்த இமெயிலில் வேறு எதுவும் இல்லை.

gmail april 1

அவசர செய்தி, உயர் அதிகாரிகளுக்கு முக்கிய ஆவணம் அனுப்பியவர்கள், என்று அலுவலக நிமித்தமாக மெயில் அனுப்பியவர்கள் எல்லாம் முறையாக சிக்கிக்கொண்டார்கள். மேலாளர்களின் கோபத்துக்கு ஆளாகி உடனடியாக வேலையை விட்டு தூக்கி ஏறியப்பட்டார்கள். இதில் என்ன ஒரு விசேஷம் என்றால், கேலி பொம்மையோடு வந்த அந்த ஈமெயிலுக்கு மேலதிகாரிகள்  ரிப்ளை செய்தாலும் அது நம்மாட்களுக்கு வந்து சேராது. அதனால் நாம அனுப்பிய ஈமெயிலுக்கு கூட அவன் பதில் அனுப்பல.. அப்போ அவ்வளவு திமிரா! என்று முதலாளிகள் கடுப்பாகி போனார்கள்.

படிங்க:கம்ப்யூட்டரில் வாட்ஸ் அப் பயன்படுத்துவது எப்படி ?

எல்லாம் கூகிள் செய்த வேலை, என் வேலை பறிபோய்விட்டது. இப்போது சந்தோஷமா கூகிள் ? என்று பலரும் கூகிளை வாயில் வந்ததை கொண்டு குடும்பத்தோடு திட்ட, கூகிள் அந்தர் பல்டி அடித்து, ஐயையோ நாங்க சும்மா விளையாட்டுக்கு தான் செஞ்சோம். அது இப்படி போய் முடியும் என்று எங்களுக்கு தெரியாது. தயவு செய்து எங்களை எல்லோரும் மன்னித்து விட்டு விடுங்கள் என்று கதறியது.

தற்போது இது குறித்து கூகுளின் செய்தி தொடர்பாளர் கூறும் போது, ஜிமெயிலில் இருந்த சிறு பிழைகளால் இந்த கோளாறு ஏற்பட்டு விட்டது. உடனடியாக சரி செய்ய முயற்சிகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றது என்று கூறியுள்ளார்.

உங்களுக்கு கணினி குறித்து சந்தேகம் இருந்தால் இங்கே கிளிக் செய்து உங்கள் கேள்விகளை பதியலாம்.

என் இலவச கணினி ஆலோசனைகள் மற்றும் கணினி குறித்த பதிவுகளை இலவசமாக பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.  

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.