Home » பொதுவானவை » குழந்தைகள் ஜாக்கிரதை
குழந்தைகள் ஜாக்கிரதை

குழந்தைகள் ஜாக்கிரதை

ஒரு காலத்தில் குழந்தைகள் பொம்மையை வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருப்பார்கள். ஆனால், இன்று அது போல் இல்லை. வேலை முடித்து அப்பா வீட்டுக்கு வந்ததும், உன் போனை கொடுனு சொல்லி, அழுது அடம்பிடித்து வாங்கி கேம் விளையாட ஆரம்பித்துவிடுகிறார்கள். இது நல்ல துவக்கமா ? என்றால் .. இல்லை.  

இணையத்தில், குழந்தைகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும் நிஸ்சின்ட் (Nischint) நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை நம்மை நம் குழந்தைகளின் எதிர்காலம் பற்றி அச்சப்பட செய்துள்ளது.

child-safetyநிஸ்சின்ட் குழந்தைகளை கண்காணிக்கும் ஒரு மென்பொருள். குழந்தைகள் அவர்களுடைய போனில் என்னவெல்லாம் பார்க்கிறார்கள், செய்கிறார்கள், பேசுகிறார்கள் என்பதை ஒன்று விடாமல் தாய், தந்தையருக்கு சொல்லிவிடும். தற்போது இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,

  • ஒவ்வொரு குழந்தையும் சராசரியாக யூ டுயுப், ஸ்நாப் சாட், பேஸ்புக், ட்விட்டர் என ஒரு நாளைக்கு 3.5 மணி நேரங்களை செலவிடுகிறார்கள்.
  • குழந்தைகளால் அதிகம் பார்க்கப்பட்ட தளங்களில் google.co.in, flipkart.com , crickinfo.com, facebook.com போன்ற தளங்கள் அடக்கம்.
  • அதிகமாக தரவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் பேஸ்புக், வாட்ஸ்அப், கேண்டி க்ரஷ், யூ டுயுப், ஸ்நாப் சாட், என்டிடிவீ செயலிகள் முதலிடம் பிடிக்கின்றன.
  • இவர்கள் செல்போன் அதிகமாக பயன்படுத்தும் நேரம் மாலை 5 திலிருந்து 8 வரை.
  • ஒரு நாளைக்கு 45 பேரிடம் செல்போனில் பேசுகிறார்கள்.

இந்த ஆய்வுக்காக 5- 17 வயதுவரை உள்ள, 7,000 குழந்தைகளை மட்டுமே கணக்கில் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகள் வளரும் பருவத்தில் அவர்களை கண்காணிக்க வேண்டியது பெற்றவர்களின் கடமை, நல்லது, கெட்டது புரியாமல் நிலைமாறும் பருவம் என்பதால், எப்போதும் அவர்கள் மேல் உங்கள் பார்வையை வைத்துக்கொள்ளுங்கள்.

தனிமையில் விடாதீர்கள். தனிமை ஆயிரம் தீய விசயங்களை சொல்லிக்கொடுக்கும்.

செல்போன், லேப்டாப் கேட்டால் உடனே கொடுத்துவிடாதீர்கள். விதிமுறைகளை  முன் வையுங்கள்.

கடைசியாக பெற்றோர்களுக்கு, உங்கள் குழந்தைகளுக்கு பாசத்திற்காக போனையும், கணினியையும் கையில் கொடுத்தால், அது அவர்களை இன்று அல்ல என்றோ ஒரு நாள்  நாசம் செய்துவிடும்.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.