Home » கணினி » பேஸ்புக் தவறை சுட்டிக்காட்டினால் பரிசு- டாலர்களை அள்ளும் இந்தியர்கள்
பேஸ்புக் தவறை சுட்டிக்காட்டினால் பரிசு- டாலர்களை அள்ளும் இந்தியர்கள்

பேஸ்புக் தவறை சுட்டிக்காட்டினால் பரிசு- டாலர்களை அள்ளும் இந்தியர்கள்

பேஸ்புக் உலகம் முழுவதும் மக்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் முதன்மையானதாக  விளங்குகிறது. இதற்கு போட்டியாக பல்வேறு தளங்கள் செயல்பட்டாலும் பேஸ்புக் எப்போதும் தன் வழியில் வீர நடைப்போட்டு செல்கிறது என்றே சொல்லலாம். பொதுவாக ஒரு இணையதளம் நடத்துவது என்பது கொஞ்சம் கடுமையான வேலைதான். கண்ணுக்கு தெரிந்தும், தெரியமாலும் உங்களை பலர் தாக்கி கொண்டிருக்க உங்கள் இணையதளத்தை நீங்கள் பாதுகாப்பாக முன்னேற்றி செல்ல வேண்டும்.

படிங்க: பழைய பொருட்களை ஆன்லைனில் வாங்கும் போது இதை யோசிங்க சார் !

எளிமையாக சொல்வதென்றால், நன்றாக வளர்ந்து வரும் ஒரு இணைய தளத்தின் வளர்ச்சி பிடிக்காத சிலர் அதை ஹாக் செய்ய முயற்சிப்பார்கள். அப்படி அவர் விரிக்கும் வலையில் நமது இணையதளம் விழுந்து விட்டால், பிறகு அவ்வளவுதான்.

இந்த பிரச்சினையில் இருந்து தப்புவதற்கு பிரபல சாப்ட்வேர் நிறுவனங்கள் யாவும் தன் வசம் எப்போதும் பாதுகாப்பு வல்லுனர்களை கூடவே வைத்துக்கொள்ளும்.

இதோடு பக் பவுண்டி (Bug Bounty) என்றொரு திட்டத்தையும் நடத்தி வரும். பக் பவுண்டி திட்டத்தின்படி உலகில் உள்ள யார் வேண்டுமானாலும் ஒரு இணையதளத்தில் உள்ள குறைகளை அந்த நிறுவனத்திற்கு எடுத்துச் சொல்லலாம். நீங்கள் சுட்டிக்காட்டிய அந்த குறை சரிதான் என்றால்

படிங்க: உங்கள் இன்டர்நெட் செலவை மிச்சப்படுத்த 4 வழிகள்

சம்பந்தப்பட்ட அந்த நிறுவனம் உங்களுக்கு பரிசு தொகை ஒன்றை அறிவிக்கும்.

பேஸ்புக், கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் இது போன்ற திட்டத்தை நடத்தி வருகின்றன.  கடந்த வருடம் மட்டும் பேஸ்புக்கில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி இந்தியர்கள் ரூ.4.8 கோடி பரிசு பெற்றுள்ளனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இது பற்றிய செய்தி தினமலரில் கூட வந்திருக்கிறது.

சரி பக் பவுண்டி திட்டத்தில் நான் எனென்ன சுட்டிக்காட்டலாம் ?

படிங்க: பேஸ்புக்கின் பரம ரகசியம் ? தெரிந்துக்கொள்ளலாம்

ஒரு இணையதளத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் தவறாக இயங்கும் முறைகள் போன்ற முக்கிய குறைபாடுகளை சுட்டிக்காட்டலாம். அதற்காக உங்கள் மெனு பார் சரியில்லை. கலர் கேவலமாக இருக்கிறது என்றெல்லம் சொல்லக்கூடாது பாஸ்.

பக் பவுண்டி பற்றி விக்கிபீடியா என்ன சொல்கிறது ?  

படிங்க: என் புத்தகத்தை இலவசமாக டவுன்லோட் செய்ய

உங்களுக்கு கணினி குறித்து சந்தேகம் இருந்தால் இங்கே கிளிக் செய்து உங்கள் கேள்விகளை பதியலாம்.

என் இலவச கணினி ஆலோசனைகள் மற்றும் கணினி குறித்த பதிவுகளை இலவசமாக பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.  

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.