Home » கணினி » கைநிறைய சம்பாதிக்க கற்றுக்கொள்ள வேண்டிய கணினி மொழிகள்
கைநிறைய சம்பாதிக்க கற்றுக்கொள்ள வேண்டிய கணினி மொழிகள்

கைநிறைய சம்பாதிக்க கற்றுக்கொள்ள வேண்டிய கணினி மொழிகள்

இன்றைய வளரும் மாணவர்கள் பலரும் நுனி புல்லை மேய்பவர்களாக இருக்கிறார்கள். எதாவது ஒரு பொருளை முழுமையாக செய்துக் கொடுத்தால் அதை உபயோகிக்க தெரியும் ஆனால் அதை எப்படி உருவாக்குவது என்றோ அல்லது அது இயங்கும் முறைமை குறித்தோ எதுவும் தெரிவதில்லை. மாணவ சமுதாயத்தை ஒரேயடியாக குற்றம் கண்டு சொல்லும் நாம் சிறந்தவர்கள், அறிந்தவர்கள் என்று சொல்லவில்லை. மாறாக அவர்களுக்கு நாம் எடுத்துரைக்க வேண்டும்.

இன்று எங்கு பார்த்தாலும் வேலை இல்லா திண்டாட்டம், அப்படியே வேலை கிடைத்தாலும் ஒன்று படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்காது, அல்லது குறைந்த ஊதியத்திற்கு வேலை கிடைக்கும். ஒரு இடத்தில் வாய்ப்பு இல்லையென்றால் அங்கு நமக்கு வேலை இல்லை என விட்டுவிடக்கூடாது.

வெப் டிசைனிங் கற்றுக்கொள்ள விருப்பம் இருக்கா ?

இன்று வேலைகொடுக்கும் நிறுவனங்கள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறது என்று சரியாக புரிந்துக்கொண்டு அந்த தகுதியை மட்டுமாவது வளர்த்துக்கொண்டோமெனில் நிச்சயம் கை மேல் பலன் கிடைக்கும்.

தற்போது, எனது நண்பர் வட்டங்கள் பலர் பிரபலமான எம்.என்.சி நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இதில் ஒரு சிலரை தவிர்த்து மற்ற பலர் தனக்கு தெரிந்த ஒரே ப்ரோக்ராம் மொழியை வைத்தே மாதம் 1 முதல் 1 ½ லட்சம் சம்பாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நான் என் நண்பன் ஒருவனிடம் இடையில் ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும் போது கேட்டேன், ஏண்டா? கல்லூரி நாட்களில் உனக்கு ‘சி’ ப்ரோக்ராம்மிங் சுத்தமாக தெரியாது. பல முறை நீ அந்த பகுதியில் இருந்து கேள்விகள் வந்தால் நான் பெயில் ஆகிவிடுவேன் என்றே என்னிடம் சொல்லியிருக்கிறாய். பிறகு எப்படி, அதே மொழி பயன்படுத்தும் கணினி நிறுவனத்தில் சீப் ப்ரோக்ராம்மராக இருக்கிறாய் என்று கேட்டேன்.

அவன் ரொம்ப சுருக்கமாக சொன்னான், கற்றுக்கொள்வது கஷ்டம் கஷ்டம் என்று ஒதுங்குவதை விட, என்னதான் அகப்போகிறது என்று இறங்கிவிட்டால், எல்லாம் நல்லபடியாகவே நடக்கும். ஒரு வருடம் கழித்து பார்க்கும்போது, நீ முன்பு இருந்த இடத்தில் இருந்து ஒரு அடியாவது முன்னேறியிருப்பாய்.

என்ன கணினி மொழிகள் நான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்கிறீர்களா, இதோ பட்டியல்

  1. Java 2.Python 3.C 4.C++ 5.JavaScript 6.PHP 7.Ruby 8.C# 9.CSS 10.Swift

மேலே சொல்லப்பட்டுள்ள மொழிகள் அனைத்தும் சென்ற வருடம் கூகிளில் அதிகம் தேடப்பட்ட மொழிகள். இவைகளின் பிரபலம் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரித்துள்ளேன். இதில் உங்களுக்கு எந்த மொழி பிடித்திருக்கிறதோ அதையே நீங்கள் தேர்ந்தெடுத்து படித்தால் நிச்சயம் நீங்களும் கை நிறைய சம்பாதிக்க முடியும்.

இந்த மொழிகளை நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பினால், நமது தமிழ் எக்ஸ்ப்ளோரர் இணையதளத்தின் மூலம் நடத்தப்படும் வகுப்புகளில் சேர்ந்து பயன்பெறுங்கள். வகுப்பு விபரம் அறிய இந்த எண்ணுக்கு அழைக்கலாம் contact : Gunaseelan: Cell: +8189919372

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.