Home » கணினி » மெயில் மெசேஜ் வந்தால் கரண்ட் ஷாக் அடிக்கும்: மைக்ரோசாப்ட்
மெயில் மெசேஜ் வந்தால் கரண்ட் ஷாக் அடிக்கும்: மைக்ரோசாப்ட்

மெயில் மெசேஜ் வந்தால் கரண்ட் ஷாக் அடிக்கும்: மைக்ரோசாப்ட்

உலகின் இயங்குதள தயாரிப்பில் முன்னணியில் உள்ள மைக்ரோசாப்ட் ஸ்மார்ட் வாட்ச்க்களை தயாரிக்க இருக்கிறது. இதனால் தற்போது சந்தையில் ஆப்பிள், கூகிள், மைக்ரோசாப்ட் ஆகிய மூவரும் ஸ்மார்ட் வாட்ச் சந்தையை யார் பிடிப்பது என்று சண்டை பிடிக்காத குறையாக அவரவர் ஸ்மார்ட் வாட்ச்க்களில் புது விதமான வசதிகளை திணித்து கொண்டிருக்கிறார்கள்.

இதில் மைக்ரோசாப்ட் எல்லோருக்கும் ஒரு படி மேலே போய், ஷாக் கொடுத்திருக்கிறது. இனிமேலும் ஷாக் கொடுக்கும் என்பதுதான் இங்கே உண்மை. என்ன குழப்பமாக இருக்கா? வழக்கமாக நாம் அணியும் ஸ்மார்ட் வாட்ச்க்களில் மெயில் அல்லது மெசேஜ் வந்தால், எதோ ஒரு ரிங்க்டோன் அல்லது பீப் சத்தம் வரும். இதற்க்கு நோடிபிகேஷன் சவுண்ட் என்று பெயர்.

படிங்க: நேரமும் 3 புத்தகத்தின் விற்பனையும்

இந்த சத்தத்திற்கு பதிலாக, கரண்ட் ஷாக் உடலில் பாய்ந்தால் எப்படி இருக்கும். அதைத்தான் மைக்ரோசாப்ட் தனது புதிதாக வரப்போகும் வாட்ச்களில் செய்யவிருக்கிறது. அதாவது உங்களுக்கு யாரவது மெயில், மெசேஜ் செய்திருந்தால் நோடிபிகேஷன் சவுண்டிற்கு பதிலாக உங்கள் உடம்பில் கரண்ட் பாய்ந்து உங்களுக்கு தெரியப்படுத்தும்.

படிங்க: ஒபாமாவின் செல்போன் ரகசியங்கள்

இதில் எந்தளவிற்கு கரண்ட் வரும், இதில் உடலுக்கு தீங்காக அமையுமா என்பதெல்லாம் தெரியவில்லை. இருந்தாலும் இந்த புதிய யோசனைக்கு மைக்ரோசாப்ட் காப்புரிமை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.