Home » கணினி » இணையத்தில் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் – Digital Branding
இணையத்தில் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் – Digital Branding

இணையத்தில் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் – Digital Branding

ணையம் இன்று கட்டுக்குள் அடங்காத காளை போல் சீறிப்பாய்ந்து எங்கோ நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த காளையின் ஓட்டம் இங்குதான் முடிவு பெறும் என்று யாராலும் கணிக்க முடியாது. இணையம் என்ற ஒன்றை வைத்துக் கொண்டு ஒரு மனிதனை ஒரு இரவினுள் இமயத்திற்கும் எடுத்துச் செல்லமுடியும் அதே சமயம் பாதாளத்திலும் தள்ளி விட முடியும்.

இதற்க்கு பெரிதாக உதாரணங்களை நான் உங்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டியதில்லை இணையத்தால் இன்று எத்தனை பேர் நல்ல விதத்திலும், தீய விதத்திலும் பிரபலமாக இருக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும்.

முன்பெல்லாம் ஒரு தகவல் மக்களிடையே பரவ வெகு நேரம் எடுத்துக்கொள்ளும். இதற்காகத்தான் ஊர் புறங்களில் தண்டோரா போட ஒரு ஆளையே வேலைக்கு வைத்திருந்தார்கள். இந்த தண்டோரா போடுபவரின் வேலையே, ஒரு செய்தியை ஊர் முழுக்க இருக்கும் எல்லா மக்களுக்கும் தெரியப்படுத்துவதுதான்.

தற்போது இந்த தண்டோரா வேலையை இணையம் கையில் எடுத்துக்கொண்டுள்ளது என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆகவேண்டும். இந்த தண்டோரா போடும் வேலையை நீங்களும் நானும் அனுதினமும் செய்துவருகிறோம்.

எப்படி என்று கேட்கிறீர்களா?

அதான் பேஸ்புக் என்று ஒன்று இருக்கே, பிறகென்ன கவலை. புரிந்தது, புரியாதது, அறிந்தது, அறியாதது என்று எது நமது பேஸ்புக் நியூஸ் ஃபீடில் வந்தாலும் உடனே ஷேர் செய்துவிடுகிறோம். இதைத்தான் தண்டோரா என்று சொன்னேன்.

நான் வழக்கமாக பேஸ்புக்கை மிகத்தீவிரமாக பயன்படுத்தும் எனது நண்பர்களிடம் இந்த பேஸ்புக்கை எதற்காக பயன்படுத்துறீங்க? என்றொரு கேள்வியை முன்வைப்பதுண்டு. இதற்க்கு பல நண்பர்கள் தினசரி செய்திகள் வாசிக்க பயன்படுத்துகிறோம், ஊரில் என்ன நடக்கிறது என்று தெரிந்துக்கொள்ளலாம், நண்பர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்கத்தான் என்று எதோ ஒப்புக்கு சொல்லி சமாளிப்பார்கள்.

உண்மையில் எனக்கும் இந்த கேள்விக்கு சரியான பதில் தெரியவில்லை. ஆனால் இதை எதோ ஒரு அடிமைத்தனம் போலே சொல்லலாம். தொட்டாச்சு என்னோவோ தெரியல விடமுடியல. இதுதான் உண்மை.

காசுவாங்கிக்கிட்டு செய்தால் கசக்குமா?

பேஸ்புக்கில் மணிக்கணக்காக உட்கார்ந்து, நேரம், மின்சாரம், இணையம் என்று எல்லாத்தையும் வீண் செய்துக் ஷேர் செய்யும் பதிவுகள் மூலம் சம்பாதிக்க முடியும் என்றால் பலருக்கு ஆச்சரியமாக இருக்கும், சிலர் இதை நம்பவே மாட்டார்கள். ஆனால் நிச்சயம் முடியும். உலகெங்கிலும் இந்த நவீன யுகத்து தண்டோரா போடும் வேலையை மாதத்திற்கு பல லட்சங்களை சம்பாதித்துகொண்டு வெகுச் சிறப்பாக சிலர் செய்துவருகிறார்கள். இதற்க்கு பேர்தான் பிராண்டிங், டிஜிட்டல் மார்க்கெட்டிங்.

முன்பெல்லாம் நம் ஊரில் எதாவது ஒன்றை பிரபலபடுத்த சுவர் விளம்பரங்கள், பாம்ப்லெட், போன்ற எதாவது ஒரு வழியில் விளம்பரம் செய்வார்கள். ஆனால் இன்று பேனர், பாம்ப்லெட், சுவர் விளம்பரங்கள் என்று இல்லாமல் கொஞ்சம் நவீன யுகத்திற்கு தகுந்தாற்ப்போல் யோசித்தால் அதுதான் டிஜிட்டல் மார்க்கெட்டிங்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்றால் என்ன ?

ஒரு நிறுவனம் தொடங்கப்பட்ட புதிதில் அதற்க்கு விளம்பரம் அதிகம் தேவைப்படுகிறது. உடனே இணையத்தில் அந்த நிறுவனத்திற்கு விளம்பரம் தேடும் வகையில் பேஸ்புக், ஈமெயில், ட்விட்டர், போன்ற இணையம் சார்ந்த இடங்களில் விளம்பரம் செய்து அந்த நிறுவனத்தை பற்றியும், அதன் சிறப்பம்சங்கள் பற்றியும் மக்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதே டிஜிட்டல் மார்க்கெட்டிங்.

what is digital marketing

பிறகு, இந்த விளம்பரங்களால் மக்கள் கவரப்பட்டு அந்த நிறுவனத்தின் சேவைகளை பெற்றுகொள்ள முன் வருகிறார்கள். இதனால் அந்த நிறுவனத்திற்கு லாபம் கிடைக்கிறது.

உதாரணமாக நாம் இணையத்தில் எதாவது தேடிக்கொண்டிருக்கும் போது, ப்ளிப்கார்ட், ஈபே, போன்ற தளங்களில் கிடைக்கும் பொருட்களை பற்றிய விளம்பரங்கள் இணையதளங்களில் ஆங்காங்கே தென்படுவதை கவனித்திருக்கலாம். இதெல்லாம் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் ஒரு பகுதிதான்.

எப்படி செயல்படுகிறது ?

டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முதலில் ஒரு தகவலை எப்படி மக்களிடம் கொண்டு போய் சேர்க்கிறோம் என்பது மிக முக்கியம். இங்கே உங்கள் கற்பனை ஆற்றலின் உதவி நிச்சயம் தேவைப்படும். எல்லோரும் செய்வது போல் விளம்பரம் செய்துக் கொண்டிருந்தால், நிச்சயம் நீங்களும் நூறோடு ஒரு நபராகாத்தான் பார்க்கப்படுவீர்கள். அதனால் விளம்பரம் செய்யும் போது புதுமையான மற்றும் மக்களிடத்தில் எளிதில் போய் சேரும்படியாக செய்யவேண்டும்.

digital-marketing

நம்மூர் சந்தைக்கு அதிகம் வராதவர்கூட, பொழுது விடிந்தால் பேஸ்புக் பக்கம் வராமல் போவதில்லை. அதனால் இந்த இணைய விளம்பர துறைக்கு பேஸ்புக்கை சரியாக பயன்படுத்திகொண்டால் லாபம் நிச்சயம்.

இந்த வேலையை மட்டும் நீங்கள் சரியாக செய்துக் கொடுத்தால், பல நிறுவனங்கள் லட்சங்களை கூட கொட்டிக்கொடுக்க தயாராக உள்ளன. ஆனால் இதைச் செய்யத்தான் ஆட்கள் குறைவாக உள்ளார்கள்.

எப்படி கற்றுக்கொள்வது

இந்த டிஜிட்டல் பிராண்டிங் செய்ய சில வகுப்புகள் சென்னை போன்ற மாநகரங்களில் நடத்தப்படுகின்றது. அதில், இணையத்தில் எப்படி விளம்பரம் செய்யவேண்டும் என்று சொல்லித்தருகிறார்கள். அந்த வகுப்புகளில் சேர்ந்து இதை கற்றுக்கொள்ளலாம்.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.