Home » கணினி » பேஸ்புக் இல்லனா எல்லோ இருக்கு !
பேஸ்புக் இல்லனா எல்லோ இருக்கு !

பேஸ்புக் இல்லனா எல்லோ இருக்கு !

உலகில் இன்று பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் சமூகவலை தளங்களில் பேஸ்புக்கும் ஒன்று.  2004 ம் ஆண்டு மார்க் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த இணையதளம், அனைவரையும் இன்று தன் வசம் கட்டிபோட்டு வைத்திருக்கிறது என்று சொன்னாலும். சிலருக்கு பேஸ்புக்கை கண்டாலே பிடிப்பதில்லை.

பேஸ்புக்கின் சில செயல்பாடுகளை கண்டு வெறுத்துப்போன சிலர் தொடங்கியதுதான் இந்த எல்லோ என்னும் புதிய சமூகவலை தளம்.

அதாவது, பேஸ்புக், தனது வாடிக்கையாளர்களின் விபரங்களை மற்ற நிறுவனங்களுக்கு தாரைவார்க்கிறது, இது மட்டுமின்றி வியாபார, விளம்பர நோக்கோடு மட்டும் செயல்படுகிறது என்று எல்லோ நிறுவனத்தை ஆரம்பித்தவர்கள் பேஸ்புக்கின் மேல் குற்றம் சாட்டுகிறார்கள்.

இந்த எல்லோ தளத்தை பொறுத்தவரையில், விளம்பரம் ஏதும் இருக்காது, உங்கள் தகவல் பாதுகாக்கபடும். இதனால் உங்கள் தனி மனித சுதந்திரமும் பாதுகாக்கப்படும்.

இந்த எல்லோ நிறுவனம் கடந்த வருடத்திலிருந்தே செயல்பாட்டில் இருந்தாலும் , யாரும் அவ்வளவு எளிதில் சேர முடியாது. இந்த நிறுவனத்தின் பிரத்தியோக அழைப்பின் பேரில் மட்டுமே சேர முடிந்தது.

இதற்க்கு இந்த தளத்தின் சர்வர்களை காரணமாக கூறி இருந்தனர். ஆனால் தற்போது இந்த சமூகவலைதளத்தில் எல்லோரும் சேரலாம். இதற்காக எந்த சிறப்பு அழைப்பும் தேவையில்லை என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதோடு இந்நிறுவனம் ஸ்மார்ட் செயலிகளையும் அறிமுகம் செய்துள்ளது.

பேஸ்புக் போலவே நீங்கள் இந்த தளத்தில் நண்பர்களை கண்டுபிடிக்கலாம், பதிவு போடலாம், கமென்ட் போடலாம், இதோடு லவ்சும் போடலாம், அதென்ன லவ்ஸ், அதாங்க பேஸ்புக்கில் போடும் லைக் தான் இங்கே லவ்ஸாம் !

இந்த தளம் செல்ல : http://ello.co

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.