Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » கணினி » பைக், கார் விற்பனையை துவங்கியது: ப்ளிப்கார்ட்
பைக், கார் விற்பனையை துவங்கியது: ப்ளிப்கார்ட்

பைக், கார் விற்பனையை துவங்கியது: ப்ளிப்கார்ட்

ஆன்லைன் வணிக தளமான ப்ளிப்கார்ட், தற்போது தனது இணையதளத்தில் பைக், கார் விற்பனையை துவங்கியுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் அளித்துள்ள செய்தியில், வளர்ந்து வரும் இந்த துறையில் நாங்கள் இறங்கியுள்ளோம். மேலும் முதற்கட்டமாக பெங்களூர் பகுதியில் மட்டும் சோதனை அடிப்படையில் முயற்சி செய்து பார்ப்பதாகவும் பிலிப்கார்ட் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதற்காக இந்த போட்டி?

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வணிக நிறுவனங்களிடையே ஏற்கனவே கடுமையான போட்டி நிலவி வருகின்றது. ப்ளிப்கார்ட் தற்போதுதான் ஆட்டோமொபைல் துறையில் கால் பதித்துள்ளது. ஆனால் ஸ்நாப் டீல் இதற்க்கு முன்னதாகவே இந்த துறையில் செயல்பட துவங்கிவிட்டது.

குறிப்பாக ஸ்நாப் டீல் சொகுசு ரக படகுகளை கூட தனது தளத்தில் விற்பனை செய்கிறது. எது எப்படி இருப்பினும், மக்களின் போக்கை சரியாக கவனித்தே இது போன்ற நடவடிக்கைகளில் இறங்குவதாக ஆன்லைன் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.


பிலிப்கார்ட்டில் கார்/பைக் எப்படி வாங்குவது?

இந்த லிங்க் வழியாக சென்று சாதாரண பொருட்கள் வாங்குவது போலவேதான் வாங்க வேண்டும். வண்டியின் விலை இல்லாமல், முன்பணம் செலுத்த வேண்டும், பிறகு வண்டிக்கான மொத்த பணத்தையும் செலுத்தினால், வண்டி உங்கள் வீடு தேடி வரும். வண்டி வீடு வந்து சேர்ந்ததும், ரீடர்ன், ரீபிளேஸ் செய்ய இயலாது. அதோடு இந்த திட்டம் பெங்களூர் வாசிகளுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டம் வெற்றிபெற்றால் நம்மூர்களுக்கு விரைவில் அறிமுகம் செய்யப்படும்.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.