Home » மொபைல் » ப்ரீடம் 251 போனுக்கு பணம் செலுத்தியிருந்தால் கவலை வேண்டாம்
ப்ரீடம் 251 போனுக்கு பணம் செலுத்தியிருந்தால் கவலை வேண்டாம்

ப்ரீடம் 251 போனுக்கு பணம் செலுத்தியிருந்தால் கவலை வேண்டாம்

கடந்த வாரம் ப்ரீடம் 251 போன் அறிமுகம் ஆகி ஸ்மார்ட் போன் சந்தையை ஒரு கலக்கு கலக்கி விட்டு சென்றது. இந்த ஃபோனுக்காக ஆன்லைனில் பணம் செலுத்தியவர்கள், சாதாரணமாக கேஷ் ஆன் டெலிவரியில் புக் செய்தவர்கள் என்று எல்லோருக்குமே இருந்த ஒரே கவலை, அவர்களுக்கு இந்த போன் கிடைக்குமா? என்பது மட்டுமே. ஏனெனில் செய்தித்தாள்கள் மற்றும் இணையதளங்களில் இந்த போன் போலியானது என்றும் உண்மை என்றும் இரு வேறுபட்ட கோணங்களில் வாக்குவாதங்கள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் அனைவரின் வயிற்றிலும் பால் வார்த்தது போல, இந்த போனுக்காக ஆன்லைனில் பணம் செலுத்தியவர்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம், உங்கள் பணம் பாதுகாப்பாக உள்ளது என்று பிரபல பேமென்ட் கேட்வே நிறுவனம் பேயூமணி (PayU Money) அறிவித்துள்ளது.

படிங்க: ரூ. 10,000/- திற்க்குள் சிறப்பான போன்கள்  

பேயூ ஒரு நம்பகமாக நிறுவனம், ஸ்நாப் டீல், புக் மை ஷோ, ரெட் பஸ் ஆகிய பிரபல தளங்களின் பணம் வசூலிக்கும் வேலைகளை இந்த பேயூதான் கவனித்து வருகின்றது. அதோடு பேயூ வெளியிட்டுள்ள அறிக்கையில், இது வரை இந்த போனுக்காக ஆர்டர் செய்திருந்த 7 கோடி பேரில் 30,000 பேர் பணம் செலுத்தியுள்ளார்கள்.

இவர்கள் செலுத்திய பணம் முழுவதும் எங்களிடம் பாதுகாப்பாக உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு எப்போது போன் கைகளுக்கு கிடைக்கின்றதோ அப்போதுதான் நாங்கள் இந்த பணத்தை ரிங்கிங் பெல்ஸ்(ப்ரீடம் 251) கம்பனியிடம் கொடுப்போம் என்று கூறியுள்ளது.

படிங்க: ஆன்ட்ராய்டு உள்ள கான்டாக்ட்களை எப்படி பேக் அப் செய்வது?

ப்ரீடம் 251 போன் நிறுவனம் எப்படிபட்டது என்று யாருக்கும் தெரியாது, இருந்தாலும் பேயூமணி நம்பகமான நிறுவனம் என்பதால் நாம் ஓரளவு நிம்மதி பெருமூச்சு விட முடியும்.

உங்களுக்கு கணினி குறித்து சந்தேகம் இருந்தால் என்னை என் தொடர்பு எண்ணுக்கு அழைக்கலாம் [+918189919372]. அல்லது இங்கே கிளிக் செய்து உங்கள் கேள்விகளை பதியலாம்.

என் இலவச கணினி ஆலோசனைகள் மற்றும் கணினி குறித்த பதிவுகளை இலவசமாக பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.  

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.