Home » மொபைல் » இணையத்தில் லீக் ஆனது சாம்சங் போனின் விபரங்கள்- Galaxy Note 5
இணையத்தில் லீக் ஆனது சாம்சங் போனின் விபரங்கள்- Galaxy Note 5

இணையத்தில் லீக் ஆனது சாம்சங் போனின் விபரங்கள்- Galaxy Note 5

சாம்சங் நிறுவனத்தின் அடுத்த சூப்பர் மாடல் ஃபோனான சாம்சங் கேலசி நோட் 5 (Galaxy Note 5 ) யின் பிரத்தியோக படங்கள் மற்றும் போன் விபரங்கள் யாவும் இணையத்தில் லீக் செய்யப்பட்டுள்ளது.

இந்த போனின் படங்களை பார்க்கும்போதே இந்த போனை வாங்கிவிட வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் வந்துவிடும். அந்தளவிற்கு இதனுடைய வடிவமைப்பும் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது.

Also read : ஐன்ஸ்டினை விட புத்திசாலி யார் தெரியுமா ?

இதன் திரை மிகவும் தெளிவாக உள்ளது, அனைவரையும் நிச்சயமாக கவர்ந்து இழுக்கும்.

சரி இப்போது இந்த போனின் விபரங்களை பார்போம்.

5.7 இன்ச் Quad HD AMOLED டிஸ்ப்ளே  ( 2560×1440 pixels )

4 GB ராம் மற்றும் இன்டெர்னல் மெமரி 32 ஜி.பீ. தனியாக மெமரி கார்ட் எதுவும் போடமுடியாது.

16 எம்.பீ பின்பக்க கேமரா, செல்பி எடுக்க முன்பக்க கேமரா 5 எம்.பீ.

3000 mAh பேட்டரி. இந்த பேட்டரியை கழட்ட முடியாது. அதே போல் இந்த பேட்டரி அவ்வளவு சிறப்பாக இயங்காது என்று சில மொபைல் போன் வல்லுனர்கள் தெரிவித்துள்ளார்கள். இருப்பினும் போன் அறிமுகம் செய்யப்பட்ட பிறகுதான் இது பற்றி பார்க்க வேண்டும்.
இந்த போனில் இன்னொரு சிறப்பம்சமாக S- Pen என்று ஒன்று உள்ளது. இதனை கொண்டு திரையில் எழுத முடியும். கூடவே இந்த பென்னை போனை விட்டு சுலபமாக வெளியே எடுக்க ஸ்ப்ரிங் டைப் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் சமூக வலையில் பகிருங்கள்.

இது போன்ற செய்திகளை அன்றாடம் உங்கள் மின்னஞ்சலில் பெற எங்கள் தளத்திற்கு subscribe செய்யுங்கள்.

என்னை பற்றி தெரிந்துகொள்ள

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.