Home » கணினி » குளியலறை கண்ணாடியில் கூகிள்- எதிர்காலத்தின் தொழில்நுட்பமா ?
குளியலறை கண்ணாடியில் கூகிள்- எதிர்காலத்தின் தொழில்நுட்பமா ?

குளியலறை கண்ணாடியில் கூகிள்- எதிர்காலத்தின் தொழில்நுட்பமா ?

ஒரு காலத்தில், ஒரு வீட்டில் கம்ப்யூட்டர் இருந்தாலே பெரிய விஷயமாக இருக்கும். அதுவும் இன்டர்நெட் வசதியுடன் இருந்தால் சொல்லவே தேவையில்லை. ஆனால் இன்று நிலைமை தலைகீழ், பள்ளியில் படிக்கும் சிறுவனே இண்டர்நெட்டை பற்றி பெரியவர்களுக்கு வகுப்பு எடுக்கும் அளவிற்கு இணைய உலகம் வளர்ந்து விட்டது. ஸ்மார்ட் போன் வருகைக்கு பின் உலகமே கைக்குள் அடங்கியது போல உணர்கிறோம். இருப்பினும் இந்த தொழில்நுட்ப வளர்ச்சி இங்கேயே நின்று விடப்போவதில்லை. இது எதிர்காலத்தில் தொழில்நுட்பம் எந்த அளவிற்கு வளரப்போகிறது என்பதை உணர்த்தும் ஆரம்பப் புள்ளிதான்.

இதனிடையே கூகிளில் மென்பொருள் வல்லுனராக வேலை செய்யும் மாக்ஸ் பிரான் என்பவர் தனது குளியல் அறை கண்ணாடியில், கூகிள் தேடுபொறியை கொண்டு வந்துள்ளது அனைவரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது.

படிங்க: கூகிள் தேடுதலுக்கு சில டிப்ஸ்

இந்த கண்ணாடியின் மூலமாக ஒருவர், குளியல் அறையில் குளித்துக்கொண்டே நேரம், தேதி, சீதோஷ்ண நிலை மற்றும் முக்கிய தலைப்பு செய்திகள் என்று யாவையும் பெற முடியும். பிரான் கண்டுபிடித்துள்ள கண்ணாடியில் காட்டப்படும் செய்திகள் யாவும் கூகிளில் இருந்து நேரடியாக பெறப்படும். இந்த கண்டுப்பிடிப்பிற்காக இரண்டு வழி கண்ணாடி, கட்டுப்பாட்டு கருவி, மற்றும் திரை (டிஸ்ப்ளே) ஆகியவற்றை பயன்படுத்தியுள்ள பிரான், திரையை இரண்டு வழி கண்ணாடியின் நடுவில் வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Google Glass.jpeg

இதனை எதிர்கால தொழில்நுட்ப சாதனங்களின் தொடக்கமாக கருதும் பிரான், தற்போது இந்த கண்ணாடியில் குறிப்பிட்ட சில வசதிகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளதாகவும், அதனால் விரைவிலேயே கூகிளில் உள்ள மற்ற பிற வசதிகளையும் இதோடு இணைத்து மேம்படுத்தப் போவதாகவும் செய்தி தளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

படிங்க: அம்பானியின் கார் விலை தெரியுமா ?? அம்மாடி …!

படிங்க: என் புத்தகத்தை இலவசமாக டவுன்லோட் செய்ய

இந்நிலையில், இந்த கண்டுப்பிடிப்பு காலையில் அதிக நேரம் தூங்கிவிட்டு அவசர கதியில் வேலைக்கு கிளம்பும் நம்மூர் வாசிகளுக்கு ரொம்பவே உதவியாக இருக்கும் என்று இணையத்தில் பலர் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு கணினி குறித்து சந்தேகம் இருந்தால் இங்கே கிளிக் செய்து உங்கள் கேள்விகளை பதியலாம்.

என் இலவச கணினி ஆலோசனைகள் மற்றும் கணினி குறித்த பதிவுகளை இலவசமாக பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.  

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.