Home » கணினி » ஹேக்கிங் என்றால் என்ன?
ஹேக்கிங் என்றால் என்ன?

ஹேக்கிங் என்றால் என்ன?

இன்று வளர்ந்து வரும் துறைகளில் ஹேக்கிங் துறையும் ஒன்று. கணினி ஆர்வம் கொண்ட இளைஞர்கள் கற்றுக்கொள்ள துடிக்கும் துறை இது. அப்படி என்னதான் இருக்கு இந்த ஹேக்கிங்கில் என்றால், அத்தனையும் கிக்தான் . நவீன கால இளைஞர்களின் கணினி பசிக்கு தீனி போடும் இடம் இதுவே.

பொதுவாக ஹேக்கர்கள் என்பவர்கள் எப்போதும் கணினியில் தீய வேலைகளையே செய்வார்கள் என்ற எண்ணம் எல்லோரிடத்திலும் உண்டு. அப்படி நாம் நினைப்பது போல் எல்லா  ஹேக்கர்களும் தீயவர்கள் இல்லை. ஹேக்கர்களில் இரண்டு வகை உண்டு.

1. வைட் ஹாட் ஹேக்கர் (Ethical Hacker)

2. ப்ளாக் ஹாட் ஹேக்கர்

இதில் வைட் ஹாட் ஹேக்கர்கள் நல்லவர்கள். இவர்களால் யாருக்கும் எந்த தீங்கும் விளைவதில்லை. இவர்கள் பெரிய கம்பெனிகள் முதல்  சிறிய கம்பெனிகள் வரை அந்த நிறுவனங்களின் கணினி தாக்குதலை சமாளிக்க பணியமர்த்தப்பட்டிருப்பார்கள். அதாவது நீங்கள் ஒரு கணினி நிறுவனம் நடத்தி வந்தால், உங்களுகென்று சில போட்டியாளர் அல்லது தொழில் எதிரிகள்  இருப்பர். அப்படி ஒருவேளை அவர்கள் உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி பிடிக்காமல், உங்கள் நிறுவனத்தின் சர்வர்களையோ அல்லது இணையதளத்தையோ குறிவைத்து இணைய தாக்குதல் நடத்தகூடும். அது போன்ற சமயங்களில் சமாளித்து தப்பிப்பதற்க்கும், எதிரிகள் உங்கள் நிறுவன கணினிகளுகுள் ஊடுருவாமல் தடுப்பதற்கும் இந்த வைட் ஹாட் ஹேக்கர்கள் பயன்படுகிறார்கள்.

தற்போது வளர்ந்து வரும் கணினி நிறுவனங்கள் பலவும் தங்கள் கை வசம் இந்த வைட் ஹாட் ஹேக்கர்களை பல ஆயிரம் சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்திருக்கிறது. இவர்களைத்தான்  Ethical Hacker என்று அழைக்கிறோம்.

ப்ளாக் ஹாட் ஹேக்கர்

இவர்கள் அப்படியே நேர்பதம், மற்றவர்களின் ஈமெயில் கடவுசொல்லை திருடுவது முதல், பெரிய இணையதளங்களை முடக்குவது வரை எல்லாம் இவர்கள் கைவண்ணம் தான். எப்படியாவது நம்மை அவர்கள் வலையில் விழவைத்து வீழ்த்தி விடுவார்கள். இவர்களிடம் அப்படி ஏமாந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் கூகிள், அமேசான், இபே, மைக்ரோசாப்ட், பேஸ்புக் போன்ற   நிறுவனங்கள் கோடி கோடியாக பணத்தை செலவழித்து வைட் ஹாட் ஹேக்கர்களை பணியில் அமர்த்திகொள்கிறார்கள்.

உலகளவில் பிரபலமான பல தளங்கள் ஹேக்கிங் பிரச்சனையில் மாட்டி, ஒரே நாளில் காணாமல் போய் இருக்கின்றன . அதானால், உலகளவில் பிரபலமான இணையதளத்தை நடத்துவது என்பது லேசான காரியம் இல்லை என்பதை நாம் ஒரு போதும் மறுக்கமுடியாது.

ஹேக்கர்களில் பிரபலமான ஒருவராக கருதப்படும் அட்ரியன் லேமோ யாஹூ,மைக்ரோசாப்ட், நியூயார்க் டைம்ஸ் போன்ற நிறுவனங்களின் இணையதளங்களை  ஹேக்  செய்ததற்காக 2002 ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 19 தான். இவரது வாழ்க்கை குறிப்புக்கள் படமாக்கபட்டுள்ளன. தற்போது பல நிறுவனங்களுக்கு சைபர் செக்யூரிட்டி கன்சல்ன்டாக பணியாற்றி கொண்டிருக்கிறார்.

பொதுவா நாம யாராவது எதோ ஒரு குற்றத்திற்காக ஜெயிலுக்கு சென்று வந்தோம் என்றால், வேலை கிடைக்காது (அதனால ஹேக் பண்ணுங்கனு நான் சொல்லல) . ஆனால் அட்ரியன் லேமோ போன்ற ஹேக்கர்கள் தண்டனை காலம் முடிந்து வெளிவந்ததும், பல நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் வேலை கொடுக்க போட்டிபோடும். சில சமயம் அரசாங்கமே ஹேக்கிங் சம்பந்தமாக இவர்களிடம் உதவி கேட்பதுதான் வேடிக்கை. அப்படி பல ஹேக்கர்கள் இன்று அமெரிக்க அரசு நிறுவனங்களிற்காக வேலை பார்த்துவருகிறார்கள். சுருக்கமாக சொல்லப்போனால் காவலாளியை வேலைக்கு வைத்து கொள்வதை விட திருடனை வேலைக்கு வைத்துக்கொள்வது சிறந்து.

கொட்டிகிடக்கும் வேலைவாய்ப்பு  

இந்த துறையை பொறுத்தவரை வேலை வாய்ப்புகள் ஏராளம். ஆனால் திறமையானவர்கள் குறைவு. ஒருவர் ஹேக்கிங் தொழில்நுட்பத்தை ஏதோ இரண்டு அல்லது மூன்று மாத பாடத்திட்டத்தின் படி படித்து தேர்ந்து விட முடியாது. கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்மிங் எழுதும் அறிவு, நிரல், இயங்கும் முறைகள், இயங்குதளங்கள் இப்படி பல கணினி அறிவுகள் இருந்தால் மட்டுமே இந்த துறையில் நீங்கள் ஜொலிக்க முடியும். NAASCOM- ன் அறிக்கைபடி 77,000 தகுதிவாய்ந்த ஹேக்கர்கள் இந்தியாவிற்கு தேவை. ஆனால் நம் கைவசம் இருப்பதோ 22,000 மட்டுமே.

எங்கு படிக்கலாம்

ஹேக்கிங் பற்றி பெங்களூர், டெல்லி, சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள நிறுவனங்கள் பலவற்றிலும் சொல்லித்தருகிறார்கள். அதில் உங்களுக்கு பிடித்த நிறுவனங்களில் ஏதாவது ஒன்றில் சேர்ந்து பயிற்சி பெற்றுகொள்ளலாம்.  இணையதளங்களில் பல புத்தகங்கள் கிடைகின்றன, அவற்றை வாங்கி படிப்பதின் மூலமாக சற்று கூடுதல் அறிவை பெறமுடியும்.

(குறிப்பு :நல்ல புத்தகங்கள் பலவும் ஆங்கிலத்தில் மட்டுமே கிடைகின்றன )கீழே உள்ள லிங்கை சொடுக்கி பாருங்கள்.

Buy Hacking Books online

இது பற்றி மேலும் ஏதேனும் விபரம் தேவைப்பட்டால் என்னுடைய மின்னஞ்சல் முகவரி : tamilexplorer@gmail.com அல்லது கமெண்ட் செய்யுங்கள்.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.