Home » கணினி » இமேஜ்குள் பைல்களை மறைப்பது எப்படி
இமேஜ்குள் பைல்களை மறைப்பது எப்படி

இமேஜ்குள் பைல்களை மறைப்பது எப்படி

சில வேளைகளில் நமது கணினியில் உள்ள பைல்களை,யாருக்கும் தெரியாமல் ஹெய்டு (HIDE) செய்து வைப்போம்.ஆனால் இன்று ஹெய்டு (HIDE) ஆப்சன் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருப்பதால்,நாம் மறைத்து வைத்திருக்கும் பைல்கள் மற்றவர் கையில் எளிதாக சிக்கிவிடுகிறது.

சரி அது ஒருபுறம் இருந்தாலும் ,இப்போது யாரும் சந்தேகிக்காத வண்ணம் இமேஜ்குள் பைல்களை மறைப்பது எப்படி என்று பார்க்கலாம்.

1 .முதலில் மறைத்து வைக்க பயன்படுத்த போகும் இமேஜ் மற்றும் மறைக்க வேண்டிய பைல் இரண்டையும் DESKTOP இல் பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.இப்போது மறைக்க வேண்டிய பைலை மட்டும் RAR ( Winrar பயன்படுத்தலாம் ) செய்து கொள்ளுங்கள்

2.தற்போது உதாரணத்துக்கு மறைத்து வைக்க பயன்படுத்த போகும் இமேஜின் பெயர் image1.jpg (jpg ,png ) என்று வைத்துக்கொள்வோம், மறைக்க வேண்டிய பைலின் பெயர் file1.rar என்று வைத்துக்கொள்வோம்.

3.பிறகு Start AccessoriesàCMD ஓபன் செய்து கொள்ளுங்கள்.

4.இப்போது CMD யில் cd desktop என்று தட்டச்சு செய்து கொள்ளுங்கள் .பிறகு Copy /b image1.jpg + file1.rar finalimage.jpg என்பதை சரியான இடைவெளி விட்டு தட்டச்சு செய்தால் finalimage.jpg என்ற பெயரில் ஒரு இமேஜ் Destop – ல் உருவாக்கப்பட்டிருக்கும்.இப்போது அந்த இமேஜ்குள் உங்கள் பைல் மறைக்கப்பட்டுவிட்டது .

மறைக்கப்பட்ட பைலை மீண்டும் திறக்க

1 .Winrar ஓபன் செய்து கொண்டு File àOpen Archeiveà finalimage.jpg செலக்ட் செய்து Extract செய்தால் மீண்டும் மறைத்த பைலை திறக்கலாம்

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.