Home » கணினி » பேஸ்புக் ட்ரன்டிங் – பின்புறம் இருக்கும் தொழில்நுட்பம் தெரியுமா ? (facebook trending)
பேஸ்புக் ட்ரன்டிங் – பின்புறம் இருக்கும் தொழில்நுட்பம் தெரியுமா ? (facebook trending)

பேஸ்புக் ட்ரன்டிங் – பின்புறம் இருக்கும் தொழில்நுட்பம் தெரியுமா ? (facebook trending)

கடந்த மார்ச் மாத புள்ளிவிபரப்படி 1.44 பில்லியன் பயனாளர்கள் பேஸ்புக்கை பயன்படுத்தி வருகிறார்கள். உலகின் தலைச் சிறந்த சமூக வலை பின்னலாக ரூபம் எடுத்துள்ள பேஸ்புக்கில் பலர் தினசரி செய்திகளை படிக்கவே அதிகம் வருகிறார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் வலைதளத்தின் வலது மூலையில், ட்ரன்டிங் என்றொரு பிரிவு இருப்பதை நீங்கள் சில நேரம் கவனித்திருக்கலாம். ட்ரன்டிங் என்பது, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பேஸ்புக்கில் அதிகம் பகிரப்படும் அல்லது பேசப்படும் தலைப்பு.
இந்த ட்ரன்டிங் அமைப்பை சரியாக செயல்படுத்த வேண்டுமென்றால், உலகம் முழுவதும் உள்ள செய்திகளை ஒருவர் அலசி ஆராய்ந்து அதில் எது மிகவும் பிரபலமாக இருக்கிறது என்று கண்டறிய வேண்டும். ஆனால் இந்த வேலையை நிச்சயம் மனிதர்களால் செய்ய முடியாது.

அதனால் இந்த வேலை மிகச் துல்லியமாக பேஸ்புக்கின் ப்ரோக்ராமிங் அமைப்புகளே செய்து விடுகின்றன. அதாவது, ஒரே ஹாஷ்டாகுகள் கொண்ட செய்திகளை பலர் பதிவு செய்யும் போது, இந்த ப்ரோக்ராமிங் அமைப்புகள் விழித்துக் கொள்கின்றன.

உடனே அது பற்றிய செய்திகளை திரட்ட ஆரம்பிக்கிறது. நாடுகளின் எல்லைகளை அடிப்படையாக வைத்து எந்த நாட்டில் எந்த செய்தி பிரபலமாகிறது என்று தெரிந்து கொள்கிறது.

அப்போதுதான் எந்த நாட்டில் ஒரு குறிப்பிட்ட செய்தி அதிகமாக பிரபலமாகிறதோ, அந்த நாட்டினருக்கு அந்த செய்தியை ட்ரன்டிங் பகுதியில் காட்ட முடியும்.
ட்ரன்டிங் ஆகும் செய்திகளை தேர்வு செய்து முடித்தவுடன், கடைசியாக மனித கைகளுக்கு இந்த ப்ரோக்ராமிங் அமைப்புகள் செய்திகளை அனுப்பும்.

மனிதர் ஒருவர் இந்த செய்திகளை சோதித்து பார்த்துவிட்டு அதற்கான பெயர் மற்றும் சிறிய செய்தி அறிமுகம் (Description) கொடுத்து விட்டு, ட்ரன்டிங் பகுதியில் இந்த செய்தி தோன்றும்படி செய்வார்.

Please subscribe to get latest updates

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.