Home » கணினி » சாப்ட்வேர் ஏதும் இல்லாமல் பேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி?
சாப்ட்வேர் ஏதும் இல்லாமல் பேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி?

சாப்ட்வேர் ஏதும் இல்லாமல் பேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி?

இன்று பெரும்பாலும் நாம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் பேஸ்புக் பெரும் பங்கு வகிக்கின்றது. தினசரி பல லட்சம் வீடியோக்கள் பேஸ்புக்கில் அப்லோட் செய்யப்படுகின்றது. அப்படி அப்லோட்செய்யப்படும் வீடியோக்களை என்றாவது நமது கணினியில் தரவிறக்கம் செய்ய நினைப்போம்.  ஆனால் இதனை செய்ய நம்மிடம் தகுந்த மென்பொருள்கள் இல்லாமல் இருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் மென்பொருள் ஏதும் இல்லாமல் பேஸ்புக் வீடியோவை டவுன்லோட்  செய்வது எப்படி ? தொடர்ந்து படியுங்கள்.

  1. முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்துக் கொள்ளுங்கள்.
  2. பிறகு நீங்கள் டவுன்லோட் செய்ய விரும்பும் வீடியோவினை ப்ளே செய்யுங்கள்.
  3. அதன் பின் அந்த வீடியோவின் மீது ரைட் கிளிக் செய்து அதில் கிடைக்கும் வீடியோவின் URL -யை காபி செய்துக்கொள்ளுங்கள்.
  4. மற்றொரு டேப் ஒன்றை ஓபன் செய்து நீங்கள் ஏற்கனவே காபி செய்து வைத்திருந்த வீடியோ URL -யை பேஸ்ட் செய்யுங்கள்.
  5. நீங்கள் முதலில் பேஸ்ட் செய்யும் போது இது போன்ற அமைப்பில் உங்கள் URL இருக்கும். https://www.facebook.com/waheed.urrahman1/videos/980204275373378/ இதில் நீங்கள் முன்பு உள்ள  WWW என்பதற்கு பதிலாக m என்று டைப் செய்து விட்டு என்ட்டர் செய்யுங்கள் .
  6. இப்போது அந்த வீடியோ அதே டேபிள் ஓபன் ஆகும் ஆனால் பிளே ஆகாது.
  7. அதன் மேல் இருக்கும் பிளே பட்டன் மீது கிளிக் செய்யுங்கள்.
  8. ஒரு புதிய டேப் அதுவே ஓபன் செய்து வீடியோ ஓடத் துவங்கும். இப்போது அதன் மேல் மௌஸ் வைத்து ரைட் கிளிக் செய்து Save Video என்று தேர்ந்தெடுத்து தேவையான இடத்தில் நமது வீடியோவை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

எனது இலவச பதிவுகளை நீங்கள் பெற என்ன செய்ய வேண்டும்?

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்களேன் !

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.