Home » கணினி » வெப்சைட்டை கொண்டு உடனடியாக பணம் சம்பாதிப்பது எப்படி ?
வெப்சைட்டை கொண்டு உடனடியாக பணம் சம்பாதிப்பது எப்படி ?

வெப்சைட்டை கொண்டு உடனடியாக பணம் சம்பாதிப்பது எப்படி ?

இந்த தலைப்பை பார்த்ததும் ஆவலாக இந்த கட்டுரையை படிக்க வந்த எனது அன்பு நண்பர்களுக்கு வணக்கம். இரண்டு நாட்களுக்கு இது போன்ற தலைப்பில் ஒரு ஈமெயில் வந்தது. அதில் தன்னைப் பற்றி சிறிது அறிமுகம் செய்துக் கொண்ட நண்பர் ஒருவர் , குடும்பத்தில் கொஞ்சம் கஷ்டமான சூழ்நிலை நிலவுவதால், ஆன்லைனில், அதுவும் வெப்சைட் மூலமாக சம்பாதிப்பது எப்படி என்று கேட்டிருந்தார்.

இதுப் போன்ற குடும்ப கஷ்டங்களால் ஆன்லைனில் சம்பாதிக்க ஏதேனும் வழி இருக்காதா என்று ஏங்குபவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை நான் செய்ய நினைத்தாலும், இணையம் அல்லது வெப்சைட் மூலம் சம்பாதிப்பது என்பது கொஞ்சம் சிரமமே.

ஏனெனில் எப்படி ஒரு செடியை நட்டு, அது வளர்ந்து கனி தரும் வரை பொறுத்திருக்கிறோமே..அதுப்போல, வெப்சைட் ஆரம்பித்து உடனடியாக சம்பாதிப்பது என்பது நடக்காத காரியம் என்றே சொல்லலாம்.

ஒரு வெப்சைட் ஆரம்பிக்கும் போது, முதலில் அது எப்படி இயங்குகிறது என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும். பிறகு அதற்கு தேவையான முதலீடு உங்களிடம் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். (ரூ. 3000/-)

படிங்க : வெப் சைட் துவங்க இந்த இரண்டும் தேவை

இலவசமாக வெப்சைட் செய்யலாம் என்று கேள்விப்பட்டேனே ? என்று நீங்கள் கேட்கலாம்.

இலவச வெப்சைட் செய்யலாம். ஆனால் எதிர்காலத்தில் நமது வெப்சைட்டை எல்லோரும் படிக்க வேண்டும். அதன் மூலம் கொஞ்சம் புகழும், பணமும் அடைய வேண்டும் என்றால் நிச்சயம் கொஞ்சம் முதலீடு (குறைந்தப்பட்சம் ரூ.3000/-) செய்து, முறையான இணையதளம் ஆரம்பித்துத் கொள்வதில் எந்த தவறும் இல்லையே.

அதோடு உங்கள் வெப்சைட்டில் தினசரி நீங்கள் ஏதேனும் எழுதிக்கொண்டே வரவேண்டும். அதற்கு நிச்சயம் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பிழையின்றி எழுத் தெரிந்திருக்க வேண்டும். எழுத தெரியாது என்றால், நீங்கள் வேறு வழியை பாருங்கள். வெப்சைட் மூலம் சம்பாதிப்பதை கொஞ்சம் தள்ளி வையுங்கள்.

படிங்க : ஒரு வெப்சைட்.. ஆனால் சம்பாதிப்பது கோடிகளில்

பலர் அட்சென்ஸ் மூலம் சம்பாதிக்கலாமே என்று கேட்பார்கள். அதுப் பற்றி  இந்த லிங்கில் எழுதியுள்ளேன் படித்துப்பாருங்கள்.

மேலும் இந்தக் கட்டுரை இதோடு நின்று விடப்போவதில்லை. இதனுடைய தொடரை (பாகம் 2)கூடிய விரைவில் எழுதுகிறேன்.  அதனால் மறக்காமல் என்னுடைய இணையதள பதிவுகளை உங்களது இமெயிலில் பெற இங்கே பதிவு செய்துக்கொள்ளுங்கள்.

இந்த கட்டுரை உங்களின் பல கேள்விகளுக்கு விடையளித்திருக்கும் என்று நினைக்கிறன். மேலும் சந்தேகம் இருந்தால் என்னை என் தொடர்பு எண்ணுக்கு அழைக்கலாம் [+918189919372]. அல்லது இங்கே கிளிக் செய்து உங்கள் கேள்விகளை பதியலாம்.

என் இலவச கணினி ஆலோசனைகள் மற்றும் கணினி குறித்த பதிவுகளை இலவசமாக பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.  

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.