Home » கணினி » ஹாக்கராக வேண்டுமா ? இதை படியுங்கள்
ஹாக்கராக வேண்டுமா ? இதை படியுங்கள்

ஹாக்கராக வேண்டுமா ? இதை படியுங்கள்

இன்று பல இளைய சமுதாய மக்களுக்கு ஹாக்கிங் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் அதிகமாக இருக்கிறது. ஆனால் ஒரு சிறந்த ஹாக்கர் ஆக மாற வேண்டுமென்றால், என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற பல விஷயங்கள் இவர்கள் மனதிற்குள் அடைபட்டு, கடைசியில் பதில் கிடைக்காத புதிர் போல போய்விட கூடாது என்பதற்காகத்தான் இந்த பதிவு.

ஹாக்கிங் பற்றி தெரியாதவர்கள் இதை படியுங்கள்

பொதுவாக இன்று உலகளவில் சவால் மிகுந்த வேலைகளில் இந்த ஹாக்கிங்கும் ஒன்று.  இந்த ஹாக்கிங் துறையில் மட்டும் அரைத்த மாவையே அரைப்பது போல செயல்பட முடியாது. ஒரு தொழில்நுட்பம் வளர்வதற்கு முன்னர் அந்த தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம் என்ன என்பதை நாம் கணித்து விட வேண்டும். அதற்க்கு நீங்கள் எந்த அளவிற்கு தகுதியானவர் என்பதை நீங்களே சோதித்து பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

என்ன படிக்க வேண்டும்

BE, BSc  கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற படிப்புகள் அல்லது அதற்கு சமனான மற்ற கணினி சார்ந்த படிப்புகள் படித்திருக்க வேண்டும். ஒரு வேளை மற்ற படிப்புகள் படித்திருந்தாலும் ஹாக்கர் ஆவதில் எந்த பிரச்சினையும் இல்லை, இருந்தாலும்  அடிப்படை புரிதலுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருந்தால் நல்லது என்று சொல்கிறேன்.

இதன் பின்பு எத்திகள் ஹாக்கிங் (Ethical Hacking) பாடத்தினை எதாவது ஒரு நல்ல ஹாக்கிங் இன்ஸ்டியூட்டில் படிக்கலாம். இதுமட்டுமின்றி அவ்வபோது இணையத்தில் கிடைக்கும் ஹாக்கிங் சம்பந்தப்பட்ட குறிப்புகளை தேடி கண்டுபிடித்து படிப்பது உங்களை தொழில்நுட்ப வேகத்தோடு இசைந்து ஓட வைக்கும்.

படித்து முடித்த பிறகு

ஹாக்கிங் படித்து முடித்த பிறகு பல கணினி தொழில்நுட்ப நிறுவனங்கள் உங்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் ( திறமை இருந்தால் மட்டுமே ). நல்ல சம்பளத்தில் இன்பர்மேசன் செக்யூரிட்டி அனலிஸ்ட் ( Information Security Analyst) போன்ற வேலைகளில் அமர்த்தப்படுவீர்கள்.

உங்களது வேலை, உங்கள் நிறுவனத்தின் கணினி, நெட்வொர்க், இணையதளம் போன்றவற்றில், எங்கே ஹாக்கர்கள் நுழைய வழி உள்ளது என்பதை கண்டறிந்து, நிவர்த்தி செய்தவதாக இருக்கும்.

சம்பளம்

இன்று உலகளவில் இருக்கும் எத்திகள்  ஹாக்கர்களுக்கு மாத சம்பளமாக 1 லட்சத்திலிருந்து  30 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. ஆரம்ப காலங்களில் சம்பளம் என்பதையே குறிக்கோளாக கருதாமல் இந்த துறையில் சாதிப்பது எப்படி என்பதை மட்டும் பார்தோமென்றால் நிச்சயம் நீங்களும் ஒரு நல்ல ஹாக்கராக வரமுடியும்.

என் இணையதளத்தில் வெளியிடப்படும் அனைத்து பதிவுகளையும் உங்கள் ஈமெயில் பெற எங்கள் இணையதளத்தின் வலது மூலையில் உள்ள Subscribe பெட்டியில் உங்கள் ஈமெயில் முகவரி கொடுத்து Subscribe செய்துக்கொள்ளுங்கள்.  

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.