Home » பொதுவானவை » நீங்கள் பிசினஸ் துவங்கும் முன் உங்களுக்கான 5 கேள்விகள்
நீங்கள் பிசினஸ் துவங்கும் முன் உங்களுக்கான 5 கேள்விகள்

நீங்கள் பிசினஸ் துவங்கும் முன் உங்களுக்கான 5 கேள்விகள்

வேலைக்கு செல்வதை விட, நாலு பேருக்கு வேலைக் கொடுத்து நாமும் முதலாளியாக இருக்க வேண்டும் என்றுதான் பல பேர் எதிர்பார்க்கிறார்கள். எங்கள் ஊரில் எனது நண்பன் ஒருவன் இருக்கிறான். அவன் யாரை பார்த்தாலும் பிசினஸ் எதாவது இருந்தால் சொல்லுங்கள் ஜீ செய்யலாம் என்பான். ஆனால் பாக்கெட்டில் 10 ரூபாயை தவிர வேறு பணம் இருக்காது. அதோடு ஒரு நாளில் அரை மணி நேரத்துக்கு மேல் அவனால் வேலை செய்ய முடியாது. அந்தளவிற்கு சோம்பேறி. இதை நான் சொல்வதற்கு காரணம் பிசினஸ் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைக்கும் அனைவரிடமும் சில தன்மைகள் இருக்க வேண்டும் என்பதற்காகதான்.

என்ன பிசினஸ் செய்ய போறீங்க?

என்ன பிசினஸ் செய்யலாம் என்று மற்றவர்களையே கேட்டுக்கொண்டு இருக்காமல், நீங்களும் எதாவது யோசியுங்கள். அதே போன்று வாடிக்கையாளர் ஒருவருக்கு உங்கள் பிசினஸ் எந்த வகையில் உதவி புரிய போகிறது என்பதை எல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் செய்ய போகும் பிசினஸில் உங்களுக்கு முன் அனுபவம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். நண்பர்களை நம்பியோ அல்லது உறவினர்களை நம்பியோ இறங்காதீர்கள்.

சட்டப்படி சரிதானா?

சில புது வித பிசினஸ்களை துவங்கும் போது, சட்டம் என்ன சொல்கிறது என்று கொஞ்சம் பாருங்கள். இந்தியாவில் எல்லா தொழில்களையும் அரசாங்கம் அனுமதிப்பதில்லை. ஒரு சில பிசினஸ்களுக்கு தடை இருக்கலாம் அல்லது சில கட்டுபாடுகள் இருக்கலாம். அதனால் நல்லதொரு வழங்கறிஞரிடம் இது பற்றி பேசி ஒரு முடிவுக்கு வரலாம்.

படிங்க: பழைய பொருட்களை ஆன்லைனில் வாங்கும் போது இதை யோசிங்க சார் !

அதே போன்று தனி நபருக்கு உரிமையான நிறுவனம், பங்குதாரர் நிறுவனம், பிரைவேட் லிமிடெட் என்ற பல வகைகளில் நிறுவனம் ஆரம்பிக்கப்படலாம். அதனால் உங்கள் நிறுவனம் எந்த முறையின் கீழ் ஆரம்பிக்கப் போகிறீர்கள் என்பதை சரியாக பார்த்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் சட்ட சிக்கல்களில் மாட்ட நேரிடும்.

பிசினஸ் பெயர்

பெயர் எப்படி மனிதர்களுக்கு முக்கியமானதோ அதே போன்று பிசினஸ்க்கும் பெயர் ரொம்ப முக்கியம். எளிமையான அனைவரும் எளிதில் ஞாபகம் வைத்துக்கொள்ளும் படியான பெயர்களை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். அதே சமயம் அந்த பெயர் உங்கள் பிசினஸ்க்கு சம்பந்தம் உள்ளது போல் இருந்தால் இன்னும் கூடுதல் சிறப்பு.

நேரம்

புது பிசினஸ் என்பது ஒரு குழந்தைக்கு சமம். அது கொஞ்சம் வளரும் வரை, கண்ணும் கருத்துமாக 24/7 பார்த்துக்கொள்வது நம்முடைய பொறுப்பு. அதனால் அதற்கான நேரம் உங்களுக்கு இருக்கிறதா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்.

படிங்க: என் புத்தகத்தை இலவசமாக டவுன்லோட் செய்ய

பணம்

இந்த தலைப்பை கட்டுரையின் முன் பகுதியில் கொடுக்கலாம் என்று இருந்தேன். ஆனால் கடைசியாக கொடுக்க வேண்டியதாகிவிட்டது. என்ன பிசினஸ் செய்ய போகிறீர்களோ அதற்கு எவ்வளவு செலவு ஆகும். அதற்கான பணத்தை நாம் எப்படி சேகரிக்க போகிறோம் என்பதை சரியாக திட்டமிட வேண்டும். முடிந்தளவு ஆரம்பத்தில் சிறிய முதலீடு கைகொடுக்கும்.

படிங்க: கூகிள், பேஸ்புக் ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கிறது ?

இன்று பிசினஸில் கொடிக்கட்டி பறக்கும் அனைவரும் சரியான திட்டமிடுதலுடன், உழைப்பால் உயர்ந்தவர்கள்தான். அதனால் நம்பிக்கையுடன் செயல்படுங்கள் வெற்றி நம் பக்கம்தான்.

உங்களுக்கு கணினி குறித்து சந்தேகம் இருந்தால் என்னை என் தொடர்பு எண்ணுக்கு அழைக்கலாம் [+918189919372]. அல்லது இங்கே கிளிக் செய்து உங்கள் கேள்விகளை பதியலாம்.

என் இலவச கணினி ஆலோசனைகள் மற்றும் கணினி குறித்த பதிவுகளை இலவசமாக பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.  

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.