Home » மொபைல் » ஐபோன் எஸ்ஈ
ஐபோன் எஸ்ஈ

ஐபோன் எஸ்ஈ

கடந்த 21-ம் தேதியில் இருந்து இணையம் ஐபோன் பற்றிய செய்திகளில் நிரம்பி வழிகிறது. பேட்டரி எப்படி, புதிய வசதிகள் என்ன? என்பது போல இணையத்தில் சமூக வலைகளில் பலர் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். நேற்றுக்கூட ஒருவர் போன் செய்து, சார் ஐபோன் எஸ்ஈ பற்றி இன்னும் உங்க தளத்தில் எதுவும் எழுதவில்லையே, எப்போது எழுதுவீர்கள் என்று கேட்டார்.

அதனால் இனியும் தாமதிக்க வேண்டாம் என்று உடனே எழுதிவிட்டேன். ஆப்பிள் நிறுவனம் தற்போது ஐபோன் எஸ்ஈ (iPhone SE) என்ற புதிய மாடல் போனை கடந்த 21- ம் தேதி அறிமுகம் செய்தது. சிறிய அளவு திரை கொண்ட ஃபோனாக காட்சியளித்தாலும், இதிலுள்ள அம்சங்கள் ஐபோன் 5S, 6S –ல் உள்ள அம்சங்களை தாண்டும்.

படிங்க: மைக்ரோமாக்ஸ் கான்வாஸ் டேப் P 702

இந்த போனில் 4 இன்ச் திரை, 12 மெகா பிக்சல் கேமரா, A9 ப்ராசெஸ்சர், மற்றும் சிறப்பான பேட்டரி உள்ளது. இது வரை செய்து பார்த்த சோதனைகளில் இதன் பேட்டரி 10 மணி நேரம் அசராமல் தாக்கு பிடிப்பதாக போர்ப்ஸ் இணையதளம் பாராட்டியுள்ளது. எனினும் இந்த போனின் திரை துல்லியம் ஐபோன் 5S, 6S களை வைத்துப் பார்க்கும் போது கொஞ்சம் குறைவுதான்.

16, 64 ஜீபீ என்று இரண்டு பதிப்புகளில் கிடைக்கும் இந்த ஃபோன் அமெரிக்காவில் 399 டாலர்களுக்கும், இந்தியாவில் 39,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என்றும் ஆப்பிள் அறிவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 3000 அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் இந்த போன் விற்பனையாக காத்திருக்கிறது.

படிங்க: அமெரிக்க அதிபரின் செல்போன் ரகசியங்கள்?

வருகிற ஏப்ரல் 8 –ம் தேதி இந்தியாவில் இதன் விற்பனை துவங்குவது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு கணினி குறித்து சந்தேகம் இருந்தால் இங்கே கிளிக் செய்து உங்கள் கேள்விகளை பதியலாம்.

என் இலவச கணினி ஆலோசனைகள் மற்றும் கணினி குறித்த பதிவுகளை இலவசமாக பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.  

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.