Home » கணினி » க்ரோம் ப்ரௌசெர் ஒரிஜினல்தானா? சோதித்து பார்க்க வழி இதோ!
க்ரோம் ப்ரௌசெர் ஒரிஜினல்தானா? சோதித்து பார்க்க வழி இதோ!

க்ரோம் ப்ரௌசெர் ஒரிஜினல்தானா? சோதித்து பார்க்க வழி இதோ!

கூகிளின் க்ரோம் ப்ரௌசெரை இணைய பயனாளிகள் அதிகளவு பயன்படுத்துகிறார்கள். ஆனால் அப்படி பயன்படுத்தும் க்ரோம் ப்ரௌசெர் ஒரிஜினல்தானா என்பதை ஒரு முறை சரி பார்த்துக்கொள்ள வேண்டியது தற்போது கட்டாயமாகியுள்ளது.

ஏனெனில் ஈபாஸ்ட் என்னும் மால்வர், க்ரோம் ப்ரௌசெர்களை மட்டும்

கவனிக்க: சில நாட்களுக்கு முன்பு என் நண்பனின் கணினி பாதிப்படைந்த போது, இந்த ஈபாஸ்ட் மால்வர் பற்றி தெரியவந்தது. அதனால் உங்களோடும் பகிர்ந்து கொள்ளலாமே என்ற எண்ணத்தில் இந்த பதிவை  எழுதுகிறேன்.  

குறிவைத்து தாக்கி வருவதாக ஆண்டிவைரஸ் நிறுவனமான மால்வேர்பைட் அறிவித்துள்ளது. இதுவரை பல லட்சம் கணினிகளை பாதித்துள்ள இந்த மால்வேர் உங்கள் கணினியையும் பாதிக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது.

இந்த ஈபாஸ்ட் மால்வர் மற்ற மால்வேர்களை போல, க்ரோம் ப்ரௌசெரினை பாதியளவு பாதிக்காமல், அதை முழுவதுமாக போலி க்ரோம் மென்பொருளை கொண்டு மாற்றி விடுகிறது. இதனால் பயனாளிகளுக்கு தங்களது க்ரோம் மென்பொருள் போலியானது என்றுக்கூட தெரியாமல் போய்விட வாய்ப்புள்ளது. மேலும் இந்த ஈபாஸ்ட் மால்வர் மூலமாக நமது கணினியில் இன்ஸ்டால் செய்யப்பட்ட போலி க்ரோம் ப்ரௌசெரில் வேலை செய்யும் போது தேவையில்லாத விளம்பரங்களும், தவறான தளங்களுக்கு அழைத்துச் செல்லுதலும் நடைபெறும்.

அதோடு உங்கள் கணினியில் உள்ள தகவல்கள் அனைத்தும் ஹாக்கர்கள் வசம் சென்று விடும். இதனால் முதலில் உங்கள் ப்ரௌசெர் ஒரிஜினல்தானா என்று ஒரு முறை சோதித்து பார்த்துக்கொள்வது நல்லது.

முதலில் உங்கள் க்ரோம் ப்ரௌசெரை திறந்து கொள்ளுங்கள். பிறகு chrome://chrome என்று மேலே உள்ள அட்ரெஸ் பாரில் டைப் செய்யுங்கள். இப்போது உங்கள் ப்ரௌசெர் உண்மையானதாக இருந்தால் க்ரோம் என்ற பக்கம் திறக்கப்பட்டு, அதனுடைய பதிப்பு விபரங்களும் காண்பிக்கப்படும். இதனைக்கொண்டு உங்கள் ப்ரௌசெர் ஒரிஜினல் என்றுக் தெரிந்துக்கொள்ள முடியும்.

ஒருவேளை ஈபாஸ்ட் என்ற பெயரில் பக்கம் திறக்கப்பட்டு விபரங்கள் காண்பிக்கப்பட்டால், உங்கள் கணினி பாதிப்புக்குள்ளாகி உள்ளது என்பதை தெரிந்துக்கொள்ளலாம். அதன் பிறகு ப்ரோக்ராம்ஸ் சென்று eFast 000.110010107 என்ற பெயரில் இருக்கும், மென்பொருளை நீக்கிவிட்டு, ஆண்டிவைரஸ் மென்பொருள் கொண்டு ஒரு முறை ஸ்கேன் செய்துக்கொண்டால் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும்.   

இந்த செய்தி உங்கள் நண்பருக்கும் பயனுள்ளதாக இருக்கும், உங்கள் பேஸ்புக்கில் பகிரலாமே! 

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.