Home » கணினி » 2015 கண்ணோட்ட வீடியோ உருவாக்கலாம்
2015 கண்ணோட்ட வீடியோ உருவாக்கலாம்

2015 கண்ணோட்ட வீடியோ உருவாக்கலாம்

2015- இப்போதுதான் பிறந்தது போல் இருந்தது, அதற்குள் வருஷம் போனதே தெரியல என்று பலர் புலம்புவதை கேட்டுகொண்டிருக்கும் நேரத்தில், இந்த வருடத்தில் நாம் என்னென்ன செய்திருக்கிறோம் என்பதை ஒரு கண்ணோட்ட வீடியோவாக செய்து பார்த்தால் எப்படி இருக்கும்.வீடியோவா ? அது எப்படி செய்யறது என்று  நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. உங்களிடம் இருக்கும் சாதாரண படங்களை கொடுத்தால், அதை வீடியோவாக மாற்றித்தரும் தளம்தான், http://wideo.co/en/.

இந்த தளத்தில் சென்று இந்த ஆண்டில் நீங்கள் எடுத்த சில புகைப்படங்களை வைத்து வீடியோ செய்து ஆண்டை ஒரு கண்ணோட்டம் விடலாம். இந்த தளத்திலயே வீடியோவிற்கு தேவையான இசை, அனிமேஷன் செய்யும் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

எல்லோரும் பயன்படுத்தி பார்க்கக்கூடிய தளங்களின் பட்டியலில் அண்மையில் இந்த தளமும் இணைந்துள்ளது. முடிந்தால் ஒரு முறை பயன்படுத்தி பார்த்து விட்டு சொல்லுங்கள்.

தளம் செல்ல  : http://wideo.co/en/

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.