Home » கணினி » 25 வயதை பூர்த்தி செய்த மைக்ரோசாப்ட் சோலிட்டர்
25 வயதை பூர்த்தி செய்த மைக்ரோசாப்ட் சோலிட்டர்

25 வயதை பூர்த்தி செய்த மைக்ரோசாப்ட் சோலிட்டர்

கேண்டி கிரஷ், ஆங்ரி பேர்டு போன்ற  கேம்கள் வெளிவராத காலம் அது. அப்போது இணையமும் அவ்வளவு பிரபலம் இல்லை, அதனால் ஆன்லைன் கேம்களுக்கும் வழியில்லை. இந்த நேரத்தில் கணினி விளையாட்டு பிரியர்களுக்கு கைகொடுத்த ஒரே கேம் என்றால் அது  சோலிட்டர்தான்.

இந்த பெயரை கேட்டவுடன் சிலருக்கு எங்கோ கேட்டது போல் இருக்கலாம். மறந்துடீங்களா ? .. விண்டோஸ் கணினியில் மணிகணக்காக உட்கார்ந்து விளையாடிய சீட்டுகட்டு கேம்தான் இது.

இப்போது விசேஷம் என்னவென்றால் இந்த கேம் வெளியாகி 25 வருடங்களை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது. இதனை சிறப்பிக்கும் விதமாக மைக்ரோசாப்ட் உலகளாவிய சோலிட்டர் போட்டி ஒன்றையும் நடத்த திட்டமிட்டுள்ளது. அதாவது ஜூன் 5 ந் தேதியிலிருந்து இந்த போட்டிகள் மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர்களுக்குள் நடைபெறும். இதில் வெற்றி பெறும் மைக்ரோசாப்ட் ஊழியர்கள் பொது மக்களுடன் போட்டியில் கலந்து கொள்வார். வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் காத்திருக்கிறது.

விண்டோஸ் 3 ம் பதிப்பில் இருந்து  வெளிவந்து கொண்டிருந்த சோலிட்டர் கேம், விண்டோஸ் 8 ம் பதிப்பில் நிறுத்தப்பட்டது, இருந்த போதிலும் இதை மைக்ரோசாப்ட் ஸ்டோரில் இருந்து தரவிறக்கி கொண்டு பயன்படுத்த முடியும்.

ஆனால் இனி வரும் விண்டோஸ் 10 ம் பதிப்பில், மைக்ரோசாப்ட் சோலிட்டர்  கேமை, இன்னும் புதிய மாற்றங்களோடு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.