Home » கணினி » மீம்ஸ் தயாரிக்க சிறந்த 10 தளங்கள்
மீம்ஸ் தயாரிக்க சிறந்த 10 தளங்கள்

மீம்ஸ் தயாரிக்க சிறந்த 10 தளங்கள்

சமூக வலைதளங்களின் வளர்ச்சிக்கு பின்னர் மீம்ஸ் சமுதாயம் உருவாகி, எந்த பாரபட்சமும் இல்லாமல் யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் கலாய்க்கலாம் என்ற போக்கு உருவாகிவிட்டது. இதிலும் குறிப்பாக பேஸ்புக்கில் அவ்வபோது நம்மூர் அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், இதோடு மட்டுமில்லாமல் எசகு பிசகாக டிவியில் பேட்டிக் கொடுத்து அவ்வபோது மாட்டிக்கொள்ளும் பொது ஜனம் என்று யாரையும் விட்டு வைக்காமல் நொடி பொழுதில் மீம்ஸ் கிரியேட் செய்து ஊர் சிரிக்க வைத்து விடுகிறார்கள்.

சரி, மீம்ஸ் கிரியேட் செய்ய எதாவது பிரத்தியோக சாப்ட்வேர் எதாவது வேண்டுமா? அல்லது இணையத்தில் இதற்கான இணையதளங்கள் ஏதேனும் உள்ளதா என்று என்னுடைய பேஸ்புக் நண்பர் ஒருவர், நம் இணையதளத்தில் இருக்கும் என்னிடம் கேளுங்கள் பகுதி மூலமாக கேட்டு இருந்தார். இதோ அவருக்கும் உங்களுக்கும் என்னுடைய பதிவு.

குயிக் மீம் (Quick Meme)

சாதாரணமாக கணினி பயன்படுத்த தெரிந்தவர்கள் கூட எளிதில் இந்த தளத்திற்கு சென்று மீம்ஸ் செய்து விட முடியும். இதனால்தான் மீம்ஸ் தயாரிக்க உதவும் தளங்களிலயே இந்த தளம் முதலிடத்தில் உள்ளது. இந்த தளத்திற்கு சென்றால் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு, தயாராக இருக்கும் மீம்ஸ்களை எடிட் செய்தோ அல்லது செய்யாமலோ சமூகவலையில் பகிரலாம். அல்லது உங்களிடம் இருக்கும் JPEG, GIF வகை படங்களை இந்த தளத்திற்கு அப்லோடு செய்து அதையும் எடிட் செய்து, வெளியிடலாம். என்னுடைய பார்வையில் மிகக் கச்சிதமான தளம்.

தளம் செல்ல: http://www.quickmeme.com/

மீம்ஸ் மேக்கர் (Memes Maker)

இந்த தளமும் மீம்ஸ் செய்ய சிறப்பான தளம்தான். இந்த தளத்தில் மீம்ஸ் செய்ய நீங்கள் பதிவு செய்யக் கூட தேவையில்லை. நேராக சென்று ஏற்கனவே இருக்கும் மீம்ஸ்க்களை பார்த்து பிடித்திருந்தால் ஷேர் செய்யலாம். அல்லது நீங்களே உங்கள் விருப்பபடி புதிதாக தயாரித்தும் வெளியிட முடியும்.

இந்த தளம் செல்ல http://www.mememaker.net/

இதே வரிசையில் பல்வேறு சிறப்பம்சங்களோடு உள்ள மற்ற தளங்கள்

மீம் ஜெனரேட்டர் http://memegenerator.net/

மீம் சென்டர் http://www.memecenter.com/

டிஐஒய் லோல் http://diylol.com/

ட்ரோல் http://www.troll.me/

இமேஜ் பிலிப் http://imgflip.com/memegenerator

ஜிப் மீம் http://zipmeme.com/

மீம் கிரியேடார் http://www.memecreator.com/

லைவ் மீம் http://livememe.com/

இந்த தளங்கள் அனைத்தும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். அதே வேளையில் இது போன்ற மீம்ஸ்களை உருவாக்கும் போது கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. ஏனெனில் சில வேளைகளில் இந்திய சைபர் சட்டத்தின்படி உங்கள் மீது யார் வேண்டுமானாலும் வழக்கு தொடுக்க நேரிடலாம்.

சந்தேகம் ஏதும் இருந்தால், இந்த விக்கிபீடியா லிங்கில் பாருங்கள்: https://en.wikipedia.org/wiki/Information_Technology_Act,_2000  

என்னுடைய பதிவினை இலவசமாக பெற “Subscribe” செய்யுங்கள்

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.