Home » கணினி » சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்ய ஒரு தளம்
சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்ய ஒரு தளம்

சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்ய ஒரு தளம்

சென்ற வாரம் சிங்கப்பூரில் இருந்து நண்பர் ஒருவர் போன் செய்திருந்தார். அவர் அங்கு கம்ப்யூட்டர் பழுது நீக்கும் இடத்தில் வேலை செய்கிறார். பழுது நீக்குவதற்காக வாடிக்கையாளர்களின் அலுவலகம், வீடுகளுக்கு அவர் செல்வது வழக்கம். அப்படி செல்லும் நேரங்களில், சில அடிப்படை சாப்ட்வேர்களை வாடிக்கையாளர்கள் இன்ஸ்டால் செய்து தருமாறு அவரிடம் கேட்பார்களாம்.

இந்த சாப்ட்வேர்கள் எல்லாம் அவரின் பென்டிரைவில் எப்போதும் இருக்கும் என்றாலும், இணையத்திலயே சாப்ட்வேர்களை இலகுவாக இன்ஸ்டால் செய்ய வழி ஏதேனும் இருக்கிறதா? என்று என்னிடம் கேட்டார்.

இதோ அவருக்கும் உங்களுக்குமான பதில்.

படிங்க: ரூ.10000/- திற்குள் சிறப்பான பேட்டரி திறன் கொண்ட 5 போன்கள்

நிச்சயம் உண்டு ! நிநிட் (Ninite) என்னும் இணையதளம் இதற்கான தீர்வை தருகிறது. இந்த இணையதளத்தில் இலவசமாக கிடைக்ககூடிய எல்லா மென்பொருட்களும் உள்ளது. வீஎல்சி பிளேயர், க்ரோம், பயர்பாக்ஸ், ஸ்கைப், டீம் வீயூவர் போன்ற மென்பொருட்களில் துவங்கி டோரன்ட், கூகிள் டிரைவ், வின்ரார் வரை இதில் அடக்கம். இவையனைத்தும் இந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்திலயே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Ninite

எனவே, இதில் உங்களுக்கு வேண்டிய எல்லா மென்பொருட்களையும், டிக் செய்து இன்ஸ்டால் என்று கொடுத்தால் போதும். நீங்கள் தேர்வு செய்த சாப்ட்வேர்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யப்பட்டு விடும்.

படிங்க: அழைப்பவர் யாரென்று தெரியுமா ? – “ட்ரூ காலர்”

ஒவ்வொரு மென்பொருளையும் அதற்குண்டான இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்றாலும், ஒரே இடத்தில் அதும் ஒரே நேரத்தில் தேவையான மென்பொருட்கள் அனைத்தையும் இன்ஸ்டால் செய்வது, இந்த தளத்தின் சிறப்பு.

நீங்களும் எங்காவது உங்கள் நண்பர்கள் இல்லம், அல்லது கம்ப்யூட்டர் சர்வீஸ் என்று சென்றீர்கள் என்றால் இந்த தளத்தை பயன்படுத்தி தேவையானவர்களுக்கு மென்பொருட்களை இன்ஸ்டால் செய்து கொடுக்கலாம்.

குறிப்பு: பணம் கொடுத்து வாங்கப்படும் சாப்ட்வேர்களான மைக்ரோசாப்ட் ஆபிஸ், போடோஷாப் போன்ற மென்பொருட்கள் இந்த தளத்தில் கிடைக்காது.

படிங்க: சாப்ட்வேர் ஏதும் இல்லாமல் பேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி?

தளம் செல்ல: https://ninite.com/  

உங்களுக்கு கணினி குறித்து சந்தேகம் இருந்தால் இங்கே கிளிக் செய்து உங்கள் கேள்விகளை பதியலாம்.

என் இலவச கணினி ஆலோசனைகள் மற்றும் கணினி குறித்த பதிவுகளை இலவசமாக பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.  

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.