Home » வர்த்தகம் » ஆன்லைன்லில் பொருட்கள் வாங்குவது நல்லதா/ கெட்டதா?
ஆன்லைன்லில் பொருட்கள் வாங்குவது நல்லதா/ கெட்டதா?

ஆன்லைன்லில் பொருட்கள் வாங்குவது நல்லதா/ கெட்டதா?

இரண்டு வருஷத்துக்கு முன்பு, “ஆன்லைன்ல பொருள் வாங்குனா நல்லாருக்குமா, வீணா போட்ச்சுனா என்ன பண்றதுனு ” கேட்டுட்டு கடையில போய் பொருட்கள் வாங்கினவர்கள்தான் அதிகம்.  ஆனால் இன்று நிலைமை தலைகீழ். 

தற்போது ஆன்லைன் ஷாப்பிங் என்று சொல்லபடுகின்ற மின்வணிகம் மூலம் பொருட்கள் வாங்கினால் காசு மிச்சம் என்பது மக்கள் மனதில் தெளிவாக பதிந்துவிட்டது. என்னதான் காசு மிச்சம் என்று ஒரு புறம் சந்தோஷப்பட்டு கொண்டாலும் பல சமயங்களில் நேரடியாக கடைகளுக்கு சென்று பொருட்களை பார்த்து வாங்குவதுதான் சிறந்தது என்று தோன்றுகிறது.

மின்வணிகம் மூலம் பொருட்கள் வாங்குவதால் ஏற்படும் நன்மைகள்

நீங்கள் விரும்பும் பொருளை நீங்கள் விரும்பிய நேரத்தில் வாங்கலாம். இணைய இணைப்பு உள்ள மொபைல் போன் இருந்தால் மட்டும் போதும், இரவு 12 மணிக்கு கூட பொருட்கள் வாங்கிவிடலாம். அதுபோல உங்கள் ஊரில் உள்ள கடைகளில் நீங்கள் வாங்க விரும்பும் எதோ ஒரு பொருள் கிடைக்கவில்லை என்றாலும் கூட மின்வணிக முறை நமக்கு கைகொடுக்கும்.

நீங்கள் புதுவரவு போன் ஒன்று வாங்க விரும்புகீறிர் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் வாங்க விரும்பும் அந்த போனின் விலை 20,000 என்றால் உள்ளூர் கடைகளில் 1000 தள்ளுபடி செய்து 19,000 ரூபாய்க்கு கிடைக்கும். அதே சமயம் மின் வணிக தளங்களில் அந்த போனின் விலை 17,000 மாக கூட இருக்கலாம். இது போன்ற சமயங்களில் நம்பகமான தளங்களை நாடுவது நல்லது, பணம் மிச்சம் பிடிக்கும் ஆசையில் பரிச்சயம் இல்லாத தளங்களில் சென்று மாட்டிக்கொள்ளதீர். அப்படியே நம்பகமான தளங்களில் வாங்கும்போது விற்பனையாளரின் விமர்சனங்களை பார்க்க தவறவேண்டாம்.

இது மட்டுமின்றி மின் வணிக முறையில் மட்டும் அறிமுகமாகும் பொருட்களை வாங்குவதற்கும் இந்த முறையே சிறந்தது.

மின்வணிகம் மூலம் பொருட்கள் வாங்குவதால் ஏற்படும் தீமைகள்

சந்தையில் அறிமுகமாகும் புதிய போன்கள் மற்றும் ஆடை, அணிகலன்கள் வாங்கும் போது கவனமாக இருங்கள். ஒரு போனை வாங்கியவுடன் அதை எப்படி பயன்படுத்துவது என்பது பல பேருக்கு தெரியாது. கடையில் சென்று நீங்கள் போன் வாங்கும்போது அதை பயன்படுத்தும் முறை, சிம் கார்ட், மெமரி கார்டு பொருத்தும் முறை போன்றவற்றை அவர்களே சொல்லிகொடுப்பார்கள். இந்த வசதி மின்வணிகத்தில் கிடைக்காது. எல்லாவற்றையும் கஸ்டமர் கேருக்கு போன் செய்தோ அல்லது இணையத்தில் தேடியோ பெற்றுக்கொள்ளவேண்டும். மின்வணிகத்தில் பொருட்கள் வாங்கும் போது சிலவசதிகள் இருக்கும் என்று நினைத்து வாங்கி, கடைசியில் இல்லாமல் ஏமாற்றம் கூட அடையலாம்.

மின்வணிக இணையதளங்களில் ஆடை அணிகலன்கள் பார்க்க அழகாக தோன்றலாம். ஆனால் கையால் தொட்டு உணரும் போதுதான் அதன் தரம் தெரியவரும். மின்வணிகம் மூலம் வாங்கப்பட்ட ஆடை, அணிகலன்கள்  பொருந்தாத பட்சத்தில் பல மின்வணிக தளங்கள் பொருட்களை திரும்ப பெற்றுகொண்டாலும், நாம் கொடுத்த பணம் சிறிது காலம் அவர்கள் கையில் மாட்டிகொள்வது அவ்வளவு சிறந்தது இல்லையே.

சரி தீர்வுதான் என்ன ?  

இணையத்தில் பொருட்கள் வாங்கும் முன் ஒரு முறை உள்ளூர் கடையில் விலை விபரம் கேட்டுக்கொள்ளுங்கள்.

காய்கறிகள், மளிகை பொருட்களை எவ்வளவு தள்ளுபடி விலையில் இணையத்தில் விற்றாலும் வாங்க வேண்டாம்.

கேஷ் ஆன் டெலிவரி (COD) முறையை பின்பற்றுங்கள்.

வீட்டு உபயோக பொருட்கள் வாங்க கடைகளையே நாடுங்கள்.

எக்காரணம் கொண்டும் உங்கள் கிரடிட்/ டெபிட் கார்டு விபரங்களை மின்வணிக இணையதங்களில் சேமித்து வைக்கவேண்டாம்.

நம்பகமான தளங்களில் கூட சிறந்த விற்பனையாளரை நாடுங்கள். உதாரணமாக ப்ளிப்கார்ட் என்றால் WS Retail, அமேசான் என்றால்  Amazon Fulfilled என்பதை பார்த்துவாங்குங்கள்.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.