Home » பொதுவானவை » பிள்ளைகளை கெடுப்பவர்கள் பெற்றோர்களே
பிள்ளைகளை கெடுப்பவர்கள் பெற்றோர்களே

பிள்ளைகளை கெடுப்பவர்கள் பெற்றோர்களே

இந்த தலைப்பில் பட்டிமன்றம் வைத்தால், ஒரு மாசத்திற்கு பேசிகொண்டே இருக்கலாம். ஆனால் இப்போ இருக்கிற வேகமான உலகத்துள்ள அதுக்கெல்லாம் நேரமில்லை. சரி விசயத்திற்கு வருவோம்.

ஒரு குழந்தை இந்த மண்ணில் பிறந்த உடன், அந்த குழந்தையிடம் தெரிந்தோ தெரியாமலோ ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை வைக்கிறோம். உதாரணத்திற்கு , அந்த குழந்தை எழுந்து நடப்பதில் தொடங்கி, பேசுவதில் ஆரம்பித்து, பள்ளிக்கு சென்று நிறைய மதிப்பெண் பெற்று, பிறகு நல்ல வேலைக்கு சென்று, நல்ல பெண்ணை திருமணம் செய்து, குழந்தை குட்டிகளோடு வாழ்ந்து, கடைசியாக எனக்கு என்ன சொத்து வைத்தாய் என்று அவன்/அவள்  பிள்ளை கேட்டு, மேலோகம் செல்லும்வரை நீள்கிறது இந்த எதிர்பார்ப்பு .

இந்த முழு நீள கதையை பற்றி நாம் இங்கு பேச போவதில்லை. இருந்தாலும் இடையில் வரும் ஒரு பகுதியை மட்டும் இங்கே பேசலாம், அதுதான் படிப்பு.

படிப்பு என்றால் என்னவோ அல்வா சாப்பிடுவது போன்று நினைகிறார்கள் பெற்றோர்கள். இன்றைய புத்தக மூட்டைகளை சுமப்பதர்கே தனியாக கொஞ்சம் சாப்பிடனும்.அந்தளவு கனமுள்ள புத்தக மூட்டை.

குழந்தைகள் பள்ளிக்கு சென்றவுடன் கூடை நிறைய மதிப்பெண்களோடு வரவேண்டும் என்பது பெற்றோர்கள் பல பேரோட எண்ணம், இவர்கள் பக்கத்துக்கு வீட்டுக்காரர்களிடம், அலுவலக நண்பர்களிடம் பீத்திக்கொள்ள வேண்டுமே, அதற்குதான்.

அதே போல் ப்ரோக்ரேச்ஸ் ரிப்போர்ட் (Progress Report) என்பதை பல பெற்றோர்கள் இன்று ப்ளாக் மெயில் செய்யும் விசயமாக மாற்றியுள்ளனர். அதாவது, அடுத்த முறை நீ பர்ஸ்ட் ரேங்க் எடுத்தால்தான் உன் ப்ரோக்ரேச்ஸ் ரிப்போர்ட்ல சைன் பண்ணுவேன். அப்படி ஒரு வேளை  பர்ஸ்ட் ரேங்க் எடுகல என்றால்,அவ்வளவுதான்.  சைன் போடாமல் வீட்டில் பெற்றோர்கள் தவிர்க்க , பள்ளியில் ஆசிரியர்களிடம் அடி வாங்கவேண்டும் அந்த பாவப்பட்ட ஜென்ம குழந்தைகள் .

எல்லா குழந்தைகளும் புத்திசாலிகள் என்பதை நான் ஒத்துகொள்வேன், ஆனால் படிப்பில் முதலிடம் பெற்றால்தான் புத்திசாலி குழந்தை என்று நான் ஒரு போதும் சம்மதிப்பதில்லை. எல்லோரும் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெறவேண்டும், பள்ளியில் முதல் மார்க் வாங்க வேண்டும் என்றில்லை. முதல் மார்க் வாங்க முடியாத குழந்தை நாளைக்கு எதோ ஒரு துறையில் ஊர் போற்றுபவனாக வந்தால், எந்த குழந்தையை அந்த பள்ளியும், பெற்றோரும், ” மக்கு, மட சாம்பிராணி” என்று கூறினார்களோ , அவர்களே வந்தனம் சொல்வார்கள், போற்றி பாடுவார்கள்.

இன்று பல துறைகளில் வெற்றி கோடி நாட்டிகொண்டிருக்கும் பலரும், படிப்பை மட்டும் நம்பி முன்னேறி வந்தவர்கள் இல்லை. இது போன்ற சம்பவம் மாமேதை தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்விலும் நடந்தது. கணிதம் வரவில்லை என்று, ஸ்லேட்டில் “நான் ஒரு முட்டாள்” என்று எழுதி, அந்த பள்ளியின் மைதானம் முழுவதும் சுற்றிவர சொன்னார்கள். இந்த விஷயம் எடிசனை கடுமையாக பாதித்து, அன்றோடு பள்ளிக்கு முழுக்கு போட்டு, வீட்டிலிருந்தே சுயமாக படித்து, இந்த உலகுக்கே விளகேற்றினார்.

பெற்றோர்களாகிய நாம், வாழ்கையின் முடிவை குழந்தைகளிடம் ஒப்படைத்துவிடவேண்டும். அவர்களுக்கு எந்த துறை சரியாக வரும் என்று தோன்றுகிறதோ, அதை அவர்கள் தேர்வு செய்துகொள்ள முழ சுதந்திரம் தரவேண்டும். அவர்கள் தவறான் பாதையை தேர்வு செய்யும் பொது, சரியான விளக்கம் கொடுத்து, அது வேண்டாம் என்று சொல்லலாமே தவிர, எடுத்த எல்லா காரியத்திற்கும் அப்படி சொல்வது, கடைசியில் கருத்து வேறுபாடு, பிரிவினையைதான் உருவாக்கும் .

இதை கவிஞர் கண்ணதாசனும், விவேகானந்தரும் இரு வடிவங்களில் சொல்கிறார்கள்

வாழ நினைத்தால் வாழலாம்

வழியா இல்லை ஊரிலே

ஆழக் கடலும் சோலையாகும்

ஆசையிருந்தால் நீந்திவா

இதையே விவேகானந்தர்

எப்போதும் உன்னை யாருடனும்  ஒப்பிட்டு கொள்ளாதே

ஏனென்றால் நீ பிறந்த நோக்கமும், அவன் பிறந்த நோக்கமும் வேறு

அகவே குழந்தைகளுக்கு சுதந்திரம் கொடுங்கள்.அவர்கள் வீண் போக மாட்டார்கள். “எல்லாம் உன் நன்மைக்காகத்தான் சொல்றோம்” என்ற ஒரு வார்த்தைக்குள் அவர்கள் ஆசைகளை எல்லாம் தரைமட்டம் ஆக்காதீர்கள்.    

 

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.