Home » மொபைல் » இரயில் பயணங்களில் – செல்போன் திருட்டு
இரயில் பயணங்களில் – செல்போன் திருட்டு

இரயில் பயணங்களில் – செல்போன் திருட்டு

பெரும்பாலும், நாம் ஆசை ஆசையாக  வாங்கிய ஃபோன்னை அநியாயமாக தொலைப்பது பயணங்களில்தான். அதுவும் இரயில் பயணங்களில் என்று சொன்னால் அது மிகையாகாது. அதிலும் குறிப்பாக, நம்மாட்கள் ரயில் பயணத்தின் போது சார்ஜ் செய்வதற்காக மொபைலை அப்படி வைத்து விட்டு திரும்புவதற்குள் திருடப்படுவது வழக்கமாக போய்விட்டது. “சார், இங்கதானே என் மொபைலை வைத்தேன் .. யாராவது பார்த்திங்களா? என்று அருகில் இருந்தவரிடம் கேட்டால், இல்லையே சார். நானே இப்போதான் வந்தேன். என்ற பதிலை தவிர வேறு எதையும் அவர்களிடம் இருந்து எதிர்பார்ப்பதில் ஞயாயம் இல்லை.  ஆகவே எப்போதும், மொபைல் விஷயத்தில் கவனமாக இருப்பது நமது கடமை என்பதை மனதில் வைத்துக்கொண்டு பயணம் செய்யுங்கள்.

ரொம்ப நாட்களுக்கு பிறகு, பண்டிகை அல்லது விஷேசங்களுக்கு குடும்பத்தோடு மகிழ்ச்சியாக  செல்லும் நாம், இடையில் மொபைலை தொலைத்து சென்றால் இருந்த மகிழ்ச்சியெல்லாம் ஒரே நிமிடத்தில் புஸ் என்று இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.  கடந்த ஆண்டு தமிழகத்தில் மட்டும், சுமார் 3,000 திற்கும் மேற்பட்ட மொபைல் போன்கள் காணாமல் போய்வுள்ளது என்று ரயில் போலீசார் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி திருடப்படும் போன்கள் உடனடியாக ஒஎல்எக்ஸ், குயிக்கர் போன்ற இணையதளங்கள் மூலம் விற்கப்படுகிறது என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. போலீசாரும் தங்களிடம் கொடுக்கப்படும் புகார்களை கிடப்பில் போடாமல், சைபர் கிரைம் மூலமாக தேடிக்கொண்டே இருக்கிறார்கள். சில மொபைல்கள் ஆன் செய்யப்படும் போது ட்ரேஸ் செய்யப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்படுகிறது என்பது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், சில மொபைல்களை கடைசி வரையிலும் கண்டுப்பிடிக்க முடியாமலும் இருக்கின்றது.

இதே போன்று சென்னையில் காணாமல் போன ஒருவரது, ஃபோனை போலீசார் ட்ரேஸ் செய்யும் போது அது காஷ்மீர் மாநிலத்தில் இயங்கிக்கொண்டிருப்பதை கண்டுப்பிடித்திருக்கிறார்கள். இருந்தாலும் என்ன என்று ஒரு ஃபோனுக்காக காஷ்மீர் வரை சென்று அதை மீட்டு உரியவரிடம் சேர்த்துள்ளார்கள்.

அதே போன்று போன் காணாமல் போனாலும் அதனுடைய தற்போதைய இருப்பிடம் அறிந்துகொள்ளும் வகையிலான ஆப்ஸ்களை பற்றி ஏற்கனவே நமது தளத்தில் எழுதியுள்ளேன். வாசகர்கள் அதை படித்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

படிங்க தொலைந்த செல்போனை கண்டுபிடிக்க சில வழிகள்

ஃபோன்கள் அதிகமாக காணாமல் போகும் இடங்கள்

places-where-phones-stolen

  1. மக்கள் அதிகப்படியாக கூடும் இடங்கள் எதுவாக இருந்தாலும்
  2. ஃபோன் சார்ஜ் செய்யும் முனையங்கள் (Terminals)
  3. பேருந்து, ரயில், ஷேர் ஆட்டோ என்று பயணம் செய்யும் போது
  4. மதுபான விடுதிகள்
  5. ஹோட்டல், டீ கடை (சாப்பிடும் போது சிலருக்கு ஃபோனை டேபிளில் வைத்துவிட்டு சாப்பிடும் வழக்கம் இருக்கும், இதை பயன்படுத்தி இங்கு திருட்டுகள் அரங்கேறுகின்றன)

 என் இலவச கணினி ஆலோசனைகள் மற்றும் கணினி குறித்த பதிவுகளை இலவசமாக பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.  

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.