Home » கணினி » பிரதமர் மோடியின் சமூக வலை, இணைய வேகம் எவ்வளவு ?
பிரதமர் மோடியின் சமூக வலை, இணைய வேகம் எவ்வளவு ?

பிரதமர் மோடியின் சமூக வலை, இணைய வேகம் எவ்வளவு ?

பாரத பிரதமர் நரேந்திர மோடி, உலகில் தலை சிறந்த தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார். அப்படி 120 கோடி மக்களின் பிரதிநிதியாக விளங்கும் நமது பிரதமர் சமூக வலையில் இணைந்து அவ்வப்போது நிகழ்வனவற்றை உடனே தனது பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவேற்றம் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி விடுவது வழக்கம். இதிலும் சில நேரங்களில் உள்ளூர் மக்களுக்கு வாழ்த்துகள் சொல்ல அந்த மொழியை கையாள செய்வதும் இவரது வழக்கம். செய்தி சேகரிக்கும் பத்திரிக்கை ஆசிரியர்களும் அவரது பக்கத்தை பின் தொடர்வதால், உடனே செய்தி சேகரித்து விடுகிறார்கள்.

அரசு செய்து வரும் நடவடிக்கைகள் என்ன என்பதை இத்தனை காலம் புரிந்து கொள்ளாத நம்மை போன்ற சாதாரண மக்களுக்கு கூட புரியும் வகையில் பிரதமரின் பதிவுகள் இருக்கின்றன. இவை அனைத்தும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு முன்னோடிதான்.

சரி. அது இருக்கட்டும், பிரதமரின் பிஸியான வேலைகளுக்கு நடுவே, அவருடைய சமூக வலை கணக்குகளை யார் பராமரிக்கிறார்கள். அதற்கென தனியே ஆள் வைத்திருக்கிறார்களா? இது போன்ற கேள்விகள் உங்கள் மனதிலும் எழுந்திருக்கலாம். இந்த கேள்விகளுக்கு விடை காண, யாரோ ஒருவர் தகவல் பெறும் உரிமை சட்டம் மூலமாக சில உண்மைகளை நமக்கு தெளிவு படுத்தியுள்ளார்.

பிரதமரின் சொந்த சமூக வலை கணக்குகளை பிரதமரே நிர்வகித்து கொள்கிறார் என்றும் இதற்காக தனியே யாரையும் அமர்த்த வில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அபிசியல் கணக்கை மட்டும் பிரதமர் அலுவலகம் நிர்வகித்து வருகின்றது எனவும் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகத்தின் இணைய வேகம் எவ்வளவும் என்ற கேள்விக்கு, 34 எம்.பீ.பி.எஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதோடு பிரதமர் தற்போது ஐபோன் பயன்படுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.