Home » கணினி » நடுங்கச் செய்யும் ரான்சம்வேர் – ஒரு பார்வை
நடுங்கச் செய்யும் ரான்சம்வேர் – ஒரு பார்வை

நடுங்கச் செய்யும் ரான்சம்வேர் – ஒரு பார்வை

கடந்த சில தினங்களாக இணைய உலகம் பரபரத்துக்கொண்டிருக்கிறது. மனிதர்களுக்குள் புதிதாக ஒரு நோய் தொற்றிக்கொண்டால் எப்படி இருக்குமோ, அதை போன்று கணினிகளுக்கு ஏற்பட்டுள்ள ரான்சம்வேர் என்ற இந்த புதிய நோயினை எதிர்த்து போராட கணினி மற்றும் மென்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இரவு பகல் உறக்கம் இன்றி உலகம் முழுவதும் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ரான்சம்வேர் என்றால் என்ன?

ரான்சம்வேர் என்பது கணினி வைரஸ்களில் இது ஒரு வகை. கணினிக்குள் ஈமெயில் மூலமாகவோ அல்லது சில சாப்ட்வேர் தரவிறக்கம் மூலமாகவோ சுலபமாக பரவும்படி வடிவமைக்கபட்டிருக்கும். அதன்படி ரான்சம்வேர்கள் கணினிக்குள் வந்தவுடன், முதல் வேலையாக நமது கணினிக்குள் இருக்கும் அனைத்து பைல்களையும் லாக் செய்து கீழே படத்தில் உள்ளது போன்ற திரையை தோன்றச் செய்யும்.

wannacry

பணம் பறிக்கும் வேலை ஆரம்பம்

பின்னர் உங்கள் கணினியை நாங்கள் லாக் செய்துவிட்டோம். உங்களது பைல்கள் அனைத்தும் திரும்ப வேண்டுமென்றால் பிட்காயின் மூலமாக இந்த குறிப்பிட்ட முகவரிக்கு இவ்வளவு ரூபாய் பணம் செலுத்துங்கள் என்ற அறிவிப்பு உங்களுக்கு கிடைக்கும். அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் நீங்கள் பணம் செலுத்தவில்லை என்றால் நீங்கள் செலுத்த வேண்டிய தொகை முதலில் இரட்டிப்பாக மாற்றப்படும். அதன் பின்னும் நீங்கள் பணம் செலுத்தவில்லை என்றால் உங்கள் பைல்கள் முழுவதும் அழிக்கப்படும்.

யாரை குறிவைத்து இந்த தாக்குதல்

அரசு நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் சில பெரிய தனியார் நிறுவனங்கள். அதோடு எங்கெல்லாம் முக்கிய ஆவணங்கள் இருக்கிறது என்று தெரிய வருகிறதோ அங்கெல்லாம் இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளது. மைக்ரோசாப்ட் கணினிகளில் அதுவும் குறிப்பாக விண்டோஸ் எக்ஸ்.பி பயனாளர்களை குறி வைத்து நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதலில் பிரிட்டன், ரஷ்யா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

தாக்குதல் குறித்த விளக்கப்படம்

Ransomware attack

யார் இதை செய்கிறார்கள்?  

பொதுவாக ரான்சம்வேர்கள் சில விஷம ஹாக்கர் கும்பல்களால் பரப்பி விடப்படுகிறது. தற்போது பரவிவரும் இந்த ரான்சம்வேர்கள் அமெரிக்காவின் மிலிட்டரி உளவு பிரிவான National Security Agency யிடம் இருந்து சில மாதங்களுக்கு முன்பு ஹாக் செய்யப்பட்டு பரப்பப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

National Security Agency சில நிறுவனங்களை உளவு பார்பதற்கோ அல்லது சில எதிரிகளின் கணினிகளை முடக்குவதற்கோ இது போன்ற பல டூல்களை தங்கள் கைவசம் வைத்துள்ளார்கள். அதில் ஒன்றுதான் தற்போது உலகத்தில் கிட்டத்தட்ட 2 லட்சம் கணினிகளை பாதித்துள்ளது என்று முதற்கட்டமாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கணினியை பாதுக்காப்பது எப்படி?

மைக்ரோசாப்ட் நிறுவனம் கணினிகளுக்கு சங்கு ஊதும் இந்த அபாய வைரஸ்களிடம் இருந்து கணினிகளை காப்பாற்ற சில அப்டேட்களை வழங்கியுள்ளது. அதனால்    உங்களது இயங்குதளம் (ஒ.எஸ்) மற்றும் ஆண்டி வைரஸ்களை உடனடியாக அப்டேட் செய்யுங்கள்.

அறியாதவர்களிடம் இருந்து வரும் ஈமெயில் அட்டாச்மென்ட்களை திறக்காதீர்கள்.

உங்களது கணினியில் உள்ள பைல்கள் அனைத்தையும் எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்கில் பேக்–அப் செய்துக்கொள்ளுங்கள். ஹார்ட் டிஸ்க் இல்லையென்றால் கூகிள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களின் கிளவுடு சேமிப்புகளில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

டிஜிட்டல் இந்தியா, எதிலும்  இன்டர்நெட் ஆதிக்கம்  என்று வளர்ந்து வரும் வேளையில் இதுப்போன்ற சைபர் தாக்குதல்  இன்டர்நெட் உலகம் என்றுமே பாதுகாப்பானது அல்ல என்று  நம்மை சிந்திக்க செய்கின்றது.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.